உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தபஸில் திடமுடைய சத்தியவான் அப்பொழுது காட்டிற்குப்போகவென்றும் காய்கிழங்கு வெட்டவென் - றும் கோடாலி தானெடுத்துத் தோள் தனிலே வைத்துமவன் விறகொடித்து நானும் வரேன் என்று வழிநடந்தான் வேகமுடன் நடக்க மெல்லியருங் கிட்டவந்து நானும்வரேன் காட்டுக்கு நாயகரே என்று சொன்னாள் மாதா பிதாவின் அனுமதியைக்கேட்டு வந்தால் கூடவா என்னுடனே கொம்பனையே என்று சொன்னார் இருமிங்கே என்று சொல்லி ஏந்திழையாள் சாவித்திரி ஓடி ஒரு நொடியில் ஓட்டமுடன் கிட்ட வந்து மாதா பிதாவை வணங்கியே மங்கையரும் காட்டுக்குப் போய் வருவேன் கணவருடனாக (றாள் அனுப்பிவைக்க வேண்டுமென்று அன்புடனே கேட்டுநின் (அம்மா) நீ இத்தனை நாள் தன்னில் கேட்டதில்லை இந்தவரம் பட்டினியாக இருக்கின்றாய் பைந்தொடியே போய்வாரும் சடுதியிலே என்றுரைத்தார் புண்ணியர்கள் சாவித்திரியம்மன் கணவருடன் காட்டுக்கு ஏகுதல். ஓடி நடந்து உவந்து த்தமியாள் சாவித்திரி பர்த்தாவின் பாதம் பணிந்து நமஸ்கரித்து பின்னே நடந்தாளே பொற்கொடியாள் சாவித்திரி சத்தியவான் தன்னுடைய தேவியரின் கைப்பிடித்து இந்தக் காடு தன்னைப்பாராய் கமலப் பூநாயகியே விருக்ஷஞ் செடி கொடிகள் பாராய் நீ மெல்லியரே புஷ்பங்கள் பூத்து சொரிவதைப்பார் பொற்கொடியே மானுங் கலையும் விளையாடுவதைப் நீ பாராய் தாமரை ஓடைகளைப் பாராய் தார்குழலே என்று சொல்லி சத்தியவான் இங்குமங்கும் காட்டிவர