________________
19 எப்பொழுதும் போல யவசேனர் தேவியுடன் இழந்தகண்ணை யடைந்து இராஜ்ஜியத்தை யாளவென்றும் சத்தியவான் தன்னுடனே சேம்பிரமமாய் வாழவென்றும் உந்தனுக்கு நூறுபிள்ளை உள் தந்தையர்க்கு நூறுபிள்ளை என்று வரங்கொடுத்து யமராஜர் போன பின்பு ஐந்து வரங்கொடுத்து அந்தர்த்தானமானபின்பு ஓட்டம் பெருநடையாய் ஓடிவந்தாள் சாவித்திரி நாயகர் தன் தலையை எடுத்து மடியில் வைத்து சுந்தரனார் தன்னுடைய திருமுகத்தை பார்த்திருந்தாள் சொப்பனங்கள் கண்டது போல் திடுக்கிட்டுக் கண் விழித்து மஹாபுருஷர் வந்தார் மங்கயரே நீ கண்டாயா அறிந்திடுவேன் நாயகரே அனேகம் பொழுதாச்சு அநேகம் பொழுதாச்சு அஸ்தனமாச்சுதையா மேகம் வந்து மூடி வெளிச்ச மொன்றுந்தோன்றவில்லை போவோம் நாம் வாருமென்று பொற்கொடியாள் கைப்பிடித் பழங்கள் மூட்டைதன்னை பாவையருந்தானெடுத்து (து கண்டகக் கோடாலி எடுத்து மவள் தோளில் வைத்து சத்தியவான் கைபிடித்து சாவித்திரிதான் நடந்தாள் சாவித்திரியம்மன் கணவர் ஜீவனைமீட்டு மாமன் மாமியிடம் வருதல், மெள்ள நடந்தாளே மிருதுகுழலாள் நாதருடன் காட்டுத் தீயால் வெளிச்சங்கொண்டு வழி நடந்தாள் நக்ஷத்திர வெளிச்சம் நன்றாய் விளங்கிடவே வழிகண்டுகொண்டு நடந்தாரிருவருமாய் இவர்கள் கதையிங்கே இப்படியும் தானிருக்க யவசேநர் தேவியுடன் ஏது செய்வாரப்போது காரணங்கள் தோன்றவில்லை கண்கள் தெரிகிறது மைந்தரும் தேவியரும் வாராதிருப்பானேன்