பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

புத்தகத்திற்கு மொத்தம் பத்துப் படிவங்கள் என்றால் பத்தாவது படிவம் அடியிலும் 9வது படிவம் மேலுமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பத்தாவது படிவத்தில் வலது ஒரக் கீறலில் நூலுடன் கூடிய ஊசியை நுழைத்து அடுத்து கீறலின் வழியாக வெளியில் கொண்டு வந்து மேலே ஒன்பதாவது படிவத்தின் இரண்டாவது கீறலின் வழியாக நுழைத்து மூன்றாவது கீறலின் வழியாக வெளியில் கொண்டுவந்து மீண்டும் பத்தாவது படிவத்தின் மூன்றாவது கீறலின் வழியாக நுழைத்து நான்காவது கீறலின் வழியாக வெளியில் கொண்டுவர வேண்டும். இப்போது நூல் இடது ஓரத்தில் இருக்கும். இந்நிலையில் எட்டாவது ஏழாவது படிவங்களை மேலே எடுத்து வைத்துக் கொண்டு, ஏழாவது படிவத்தின் இடது ஒரக் கீறலின் அதாவது நான்காவது கீறலின் வழியாக ஊசியை நுழைத்து மூன்றாவது வழியாக வெளியில் கொண்டு வந்து எட்டாவது படிவத்தின் மூன்றாவது கீறலில் உள் செலுத்தி இரண்டாவது கீறலில் வெளிக் கொண்டு வந்து, மீண்டும் ஏழாவது படிவத்தின் இரண்டாவது கீறலில் செலுத்தி முதல் கீறலில் வெளிக் கொண்டுவர வேண்டும். இப்போது நூல் வலது ஒரத்தில் இருக்கும்.

நூலைப் பத்தாவது படிவத்துக்கும் ஒன்பதாவது படிவத்துக்கும் இடையில் வலது ஓரத்தில் நுழைத்து நடுவில் உள்ள நூலைச் சுற்றி ஒரு முடிபோட்டுக் கொள்ள வேண்டும். மறு படியும் ஆறாவது ஐந்தாவது படிவங்களை எடுத்து வைத்துக் கொண்டு, ஐந்தாவது படிவத்தின் வலது ஒரத்தில் ஊசியை நுழைத்து இரண்டாவது கீறலில் வெளிக்கொணர்ந்து ஆறாவது படிவத்தில் இரண்டாவது கீறலில் நுழைத்து மூன்றாவது கீறலில் வெளிக் கொணர்ந்து, ஐந்தாவது படிவத்தின் மூன்றாவது கீறலில் நுழைத்து நான்காவது கீறலில் வெளிக் கொண்டு வரவேண்டும். இப்போது நூல்