பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


இடது ஓரத்தில் இருக்கும். கீழேயுள்ள ஏதாவது ஒரு படிவத்தை நீக்கிக் கொண்டு இடது ஓரத்தில் நூலைக் கோத்து வாங்கி ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளவேண்டும்.

நான்காவது மூன்றாவது படிவங்களை எடுத்துக்கொண்டு மூன்றாவது படிவத்தின் 4வது கீறலில் ஊசியைக் செலுத்தி மூன்றாவது கீறலில் வெளிக் கொணர்ந்து, நான்காவது படிவத்தின் மூன்றாவது கீறலில் நுழைத்து இரண்டாவது கீறலில் வெளிக்கொணர்ந்து, மீண்டும் மூன்றாவது படிவத்தின் இரண்டாவது கீறலில் நுழைத்து முதல் கீறலில் வெளியில் கொண்டுவரவேண்டும். இப்போது நூல் வலது கோடியில் இருக்கும். கீழேயுள்ள இரண்டு படிவங்களுக்கு நடுவில் உள்ள ஒரத்து நூலில் ஊசியைக் கோத்துவாங்கி முடிந்துகொண்டு, இரண்டாவது முதலாவது படிவங்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலாவது படிவத்தின் முதல் கீறலில் ஊசியை நுழைத்து இரண்டாவது கீறலில் வெளியில் கொண்டு வந்து இரண்டாவது படிவத்தில் இரண்டாவது கீறலில் நுழைத்து மூன்றாவது கீறலில் வெளிக் கொணர்ந்து மீண்டும் முதல் படிவத்தின் மூன்றாவது கீறலில் நுழைத்து நான்காவது கீறலில், வெளிக் கொணர்ந்து, அடியில் சேர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு புத்தகத்தின் தையல் முடிந்தது தொடர்ந்து இரண்டாவது புத்தகம் மூன்றாவது புத்தகம் என்று மேலே மேலே இரண்டிரண்டு படிவங்களாக வைத்துத் தைத்துக் போக வேண்டும். ஒவ்வோர் இரண்டு படிவத்திலும் மேல் படிவத்தின் வெளிப்பகுதிகளிலும் கீழ்ப் படிவத்தின் மையப் பகுதியிலும் தையல் போடப்படும். இரண்டாவது மூன்றாவது கீறல்களில் ஊசி நுழையும் போது முதுகுநூலைப் பின்னிக் கொண்டு செல்ல வேண்டும்.

கையெட்டுகிற உயரம் வரை தைத்து முடிந்தபின் வேறு அடுக்கு ஒன்று தைக்கத் தொடங்க வேண்டும். இப்படித்