பக்கம்:மூன்று திங்களில் அச்சுத் தொழில்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


தைத்து முடிந்த பின், புத்தகங்களைத் தனித்தனியாக இரண்டு ஓர நூல்களையும் வெட்டிப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பக்கத்தாள்கள் ஒட்டவேண்டும். முதுகில் வச்சிரக் கூழ் தடவிக் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்தபின், அட்டையில் கூழ் தடவி மடித்து விட வேண்டும். காய்ந்த பிறகு மூன்று புறமும் வெட்டிப் புத்தகம் ஆக்க வேண்டும்.

காலிகோ கட்டிடம் (Colieo Binding)

காலிகோ என்பது ஒருவகைத் துணி. இது புத்தகங்களுக்கு மேலுறையாகப் போடப் பயன்படுகிறது. புத்தகத்தை நீண்ட நாட்களுக்குப் பாதுகாத்து வைக்க இது பயன்படுகிறது. முதன் முதல் கள்ளிக்கோட்டையில் தான் இந்த மாதிரித்துணி தயாரிக்கப்பட்டது. எனவே ஆங்கிலேயர்களால் இது காலிகோ என்று அழைக்கப்பட்டது. அதுவே இதன் பெயராக நிலைத்துவிட்டது.

புத்தகத்தைத் தைத்து முடித்து, பக்கத்தாள்களும் ஒட்டியபின் முதுகில் வச்சிரம் போட்டுக் காய வைத்துக் கொள்ளவேண்டும். வயிறு, தலை,வால் மூன்று புறமும் வெட்டி விடவேண்டும். முதுகைச் சுத்தியலால் தட்டிவிட்டால், முதுகு வளைந்து ஆமையோடு போல் அழகிய வடிவம் பெறும். வயிற்றுப் புறமும் உட்புறம் குழிந்து பிறை வடிவம் பெறும். முதுகில் ஒரு மெல்லிய துணியை (Cada or Long Cloth) ஒட்டி மறுபடியும் வச்சிரம் போட்டுக் காய வைக்க வேண்டும்.

புத்தக அளவுக்குப் பழுப்பு அட்டைகளை வெட்டித் துண்டு போட்டுக் கொள்ள வேண்டும். புத்தகத்தின் முதுகு அளவு பார்த்து, புத்தகத்தைவிட இரண்டு அங்குலம் நீளமும் அகலமும் மிகுதியாக வைத்து காலிகோவை துண்டு போட்டுக் கொள்ள வேண்டும். இந்தக் காலிகோ துண்டில் முழுவதும் பசையைத் தடவி, முதுகுக்கு இடைவெளி விட்டு இரண்டு