பக்கம்:மூவரை வென்றான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மூவரை வென்றான்/பெரிய...


கீழே ஐயனார் குதிரையின் அருகில் விளக்கொளியில் மரக் கைப்பிடியோடு கூடிய தீவட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. களிம்பேறிய பித்தளைக் குடம் நிறைய எண்ணெய் பக்கத்தில் இருந்தது. துணிக்கந்தை பந்தமாகச் சுற்றப்பட்டிருந்த தீவட்டிகளின் துனியைக் குடத்தில் முழுக்கி எடுத்து விளக்கின் உதவியால் கொளுத்திக் கொண்டார்கள். எண்ணெயின் வாடை மூக்கைக் கமறச் செய்து குமட்டியது. அது இலுப்பெண்ணெயாக இருக்க வேண்டுமென்று தேவர் அனுமானித்துக்கொண்டார்.

நன்றாக உற்றுப் பார்த்த்போது தேவருக்குப் பகீரென்றது! காரணம்? கீழே நின்றுகொண்டிருந்த பத்துப் பன்னிரண்டு பேர்களில் ஐந்தாறுபேர் ஏற்கெனவே அவருக்கு அறிமுகமானவர்களாக இருந்ததுதான். ஆம்; அந்த ஐந்தாறு பேர் வேறெருவரும் இல்லை: ஜமீன் மாளிகையில் தடியும் கையுமாக அவரை வழி மறித்துக்கொண்ட அதே முரடர்கள் தாம். வியப்பைச் சமாளித்துத் தாங்கிக் கொண்டே தொடர்ந்து கவனித்தார் அவர்.

ஏறக்குறைய பதினெட்டுத் தீவட்டிகள் இருக்கலாம் அத்தனையையும் கொளுத்திக் கீழே தரையில் செங்குத்தாக நட்டிருந்தார்கள். துணியோடு இலுப்பெண்ணையும் சேர்ந்து மேலே வந்த கரிப் புகைக்குக் கேட்கவா வேண்டும். குழகுழவென்று மேலே வந்த கரிப்புகை மரக்கிள்ையிலிருந்த தேவரை மூச்சு முட்டிப்போய்த் திணற அடித்தது. எப்படியோ கஷ்டப்பட்டுச் சகித்துக்கொண்டார். கண் பார்வைக்கு மட்டும் இடைவெளி கத்திரித்து விடப்பட்ட ஒரு வகைக் கறுப்பு அங்கியை அவர்கள் அணிவதைத் தேவர் கவனித்தார்.

அந்த அமாவாசை இருளில் பாழடைந்த ஐயனார். கோவிலின் அருகே மங்கிய அகல் விளக்கின் ஒளியில் கரிப் புகைக்கும் தீவட்டிகளோடு அம்மாதிரி உடையுடன் அவர்களை வேறு யாராவது கண்டிருந்தால் “ஐயையோ பெரிய பெரிய கரும்பூதங்களும் கொள்ளிவாய்ப் பிசாசுகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/40&oldid=507802" இலிருந்து மீள்விக்கப்பட்டது