பக்கம்:மூவரை வென்றான்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

93


விடலாம். இப்போது சினிமாவிலும், நாடகத்திலும் ராஜ பார்ட்டுக்காரர்கள் சந்திரப் பிறை போன்ற ஒரு வளையத் தைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொள்ளுகிறார்கள் பாருங் கள். இதுபோல் மோதிரத்தை விடக் கொஞ்சம் பெரிதாகவும் தடிமனாகவும் தங்கத்தில் செய்து, அதில் விலையுயர்ந்த நீல நிற வைரக் கற்களைப் பதித்து உருவாக்கிய கடுக்கன்கள் இரண்டைத் தம் காதுகளில் அணிந்து கொண்டிருந்தார் முத்துசாமி ஐயர். பக்கத்துக்கு இரண்டு பவுன் வீதம் தங்கமும், விலையுயர்ந்த வைரக் கற்களும் சேர்ந்த அந்தக் கடுக்கன்கள் இரண்டும் இந்தக் கால விலை மதிப்புக் கிரயப் படி பார்த்தால், ஆயிர ரூபாய்க்குமேல் பெறும். அந்தக் காலத்தில் விலையை யார் பெரிதாக மதித்தார்கள்! கரு - கருவென்று சுருண்ட குடுமியைப் பின்புறமாகக்கொண்டு. தோன்றும் அந்த முகமும், காதுகளில் ஆடும் மோதிரக் கடுக்கண்களும் விளங்க அவர் எழுந்து நின்றால், வீமன் கதாயுத்மில்லாமல் எழுந்து நிற்பதுபோல இருக்கும்.

முத்துசாமி ஐயர் கலியாணமாகாதவர். ஆனால், சாமியாரில்லை. தகப்பனார் இறந்த பிறகு தம்பிக்குக் கலி. யாணம் செய்து வைத்துவிட்டு, நிலங்கரைகளைப் பாகம் பிரித்துக்கொள்ளாமல், அவன் விட்டோடு சாப்பிட்டுக் கொண்டு விவசாயத்தைக் கவனித்து வந்தார். தம்பிக்குக் குழந்தை குட்டிகளுக்குக் குறைவில்லை, அண்ணாவிடம் அபார் பக்தி. அவர் தன்னோடு தன் வீட்டில் இருப்பதையே பெருமையாகக் கருதினான் அவன். முத்துசாமி ஐயரைக் கலியாணம் செய்து கொள்ளேண்டா முத்துசாமி! இது. என்னடா தடிக்கட்டையா ஊரைச் சுத்திக்கொண்டு..? என்று வயதான கிழம்கட்டைகள் கூடக் கேட்பதில்லை.

நாற்பத்தெட்டு வயதுக்குமேல் கழித்து விட்ட அவர், இனிமேல் கலியாணம் செய்துகொள்ள முயல்வார் என்று ஊராருக்கோ, உற்றாருக்கோ, சிறிதும் நம்பிக்கை இல்லை. கலியாணம் செய்து கொள்ளாததனால், நடத்தையில் ஒழுக்கக் கேடோ, அங்கே, இங்கே, நின்று தெருப் பெண்களை உற்றுப் பார்த்தார் என்ற அவச்சொல்லோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூவரை_வென்றான்.pdf/95&oldid=507999" இலிருந்து மீள்விக்கப்பட்டது