பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மூவர் தேவாரம் - புதிய பார்வை 4. பரவையாரை நம்பியாரூரரின் வாழ்க்கைத் துணை யாக்கல்: பரவையார் உருத்திர கணிகையர் குலத்தில் பிறந்தவர். முற்பிறப்பின் உணர்வு துண்டுதலால் பரவையார் பூங்கோயில் அமர்ந்த பெருமானை நாடோறும் வழிபட்டு வருபவர். பேரழகு மிக்கவர். ஒருநாள் இறைவனது திருவருளால் நம்பியாரூரர் பரவையாரைக் காண நேரிடுகின்றது. பரவையாரும் அவ்வாறே 'பாலது ஆணையால் நம்பியாரூரரைக் காண நேரிடுகின்றது. இருவரும் ஒருவர் மேல் மற்றொருவர் காதல் மிக்கவராகின்றனர். இவ்வாறு இருவரும் ஒருவர் மேல் மற்றவர் கொண்ட பெருங் காதலால் உறக்கமின்றி நள்ளிரவில் வருந்துதலைக் கண்ட புற்றிடங்கொண்ட பெருமான் அன்றிரவே சிவனடியார்கள் முன் தோன்றிப் பரவையாரை நம்பியாரூரர்க்குத் திருமணம் செய்து வைக்குமாறு பணித்தருளுகின்றார். அடுத்து நம்பியாரூரரை அடைந்து 'நங்கை பரவையை நினக்கு வாழ்க்கைத் துணையாகத் தந்தோம். நம் அடியார்கட்கும் இதனைத் தெரிவித்தோம்' என்று அருளிச் செய்தவர், பரவையார் முன்னிலையில் தோன்றி நினக் கும் நம்பியாரூரனுக்கும் நாளை திருமணம் நிகழும்' என்று கூறி மறைந்தருளுகின்றார். மறுநாள் வைகறையில் பூங்கோயிலமர்ந்த பெருமான் ஆணையிட்டபடி சிவனடியார்கள் அனைவரும் ஒருங்கு கூடி இறைவனது திருவருட்டிறத்தை வியந்து போற்றுகின்றனர். தம்பிரான் தோழர்க்கும் நம்பி பரவையார்க்கும் விதிப்படி திருமணத்தை நிகழ்விக்கின்றனர். இவ்வாறு இறையருளால் பரவையாரை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற தம்பிரான் தோழர் அம்மெல்லியலாருடன் அன்புடன் கலந்து மகிழும் நிலை யிலேயே சிவனருட் கடலிலும் மூழ்கித் திளைக்கின்றார். இதே இன்பப் பெருக்கில் செந்தமிழ்ப் பாமாலைகள் பாடிச் சிவபெரு மானைப் போற்றுகின்றார். நங்கை பரவையாரை வாழ்க்கைத் துணைவியாகத் தந்தருளிய திருவருட் செயலை, 97. திருக்கயிலாயத்தில் உமையம்மையாரின் சேடியரில் ஒருத்தி கமலினியார். இவர்தான் ஆலால சுந்தரரால் காதலிக்கப் பெற்றவர். இவர்கள்தாம் பரவையாராகவும் நம்பியாரூரராகவும் பிறந்தவர்கள்.