பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (3) சுந்தரமூர்த்தி அடிகள் 111 ஏழிசையாய் யிசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்குடனாகி - மாழையொண்கண் பரவையைத்தந்து ஆண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே. (7.51:10) என்று நாவலூர் அண்ணல் உளங்கசிந்து பரவிப் போற்றி யுள்ளமையைக் கண்டு மகிழலாம். 5. திருத்தொண்டத் தொகை பாட அருளுதல்: நம்பி யாரூரர் பரவையாருடன் இல்லறம் நடத்தி இறைவனை வழிபட்டு வரும் நாட்களில் ஒருநாள் தேவாசிரிய மண்டபத்தில் ஒருங்கு கூடியுள்ள சிவனடியார்களைக் கண்டு 'இவர்கட்கு அடியனாகும் நாள் எந்நாளோ?' என்னும் நினைவுடையவராய் வழி பாட்டிற்காகத் திருக்கோயிலினுட் செல்லுகின்றார். இந்நிலையில் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவனடியார்களில் ஒருவராகிய விறன்மிண்டர் வன்றொண்டர் அடியார் திருக் கூட்டத்தைப் பணியாது நேரே திருக்கோயிலினுட் செல்லுகின் றார் என்று கருதி 'சிவனடியார் கூட்டம் தம்மைப் பேணாது செல்லும் நம்பியாரூரனுக்கும் புறம்பு அவனுக்குப் பிரானாகிய சிவபெருமானுக்கும் புறம்பு" என்று வெகுண்டுரைக்கின்றார்." இந்நிலையில் “அடியவர்க்கு அடியேன்" என்னும் ஆர்வத் துடன் திருக்கோயிலுக்குள் செல்லும் வன்றொண்டர் முன் ஆரூர் இறைவன் தோன்றிக் காட்சி நல்குகின்றார், வன்றொண்டரும் தமக்கு எளிவந்து அருளிய இறைவனின் பெருங்கருணைத் திறத்தை வியந்து போற்றுகின்றார். தொண்டர்க்குத் தொண்ட னாகும் நற்பேற்றினை ஆரூரருக்கு அளித்தருளத் திருவுள்ளங் கொள்ளுகின்றார். அவருக்கு அடியார்களின் திருத்தொண்டின் 98. இன்றைய கட்சி அரசியல் போலவும், கட்சித் தொண்டர்கள் நடந்து கொள்வதைப் போலவும் சிவனடியார் கூட்டத்தில் புரட்சி வெடிக்கிறது.