பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மூவர் தேவாரம் - புதிய பார்வை (2) இரண்டாந்திருமுறை சம்பந்தப் பெருமான் அருளிய இத்திருமுறையில் இந்தளம் பியந்தைக் காந்தாரம் சீகாமரம் நட்ட ராகம் காந்தாரம் செவ்வழி என்னும் ஆறு பண்களில் அடங்கிய நூற்றிருபத்திரண்டு திருப் பதிகங்கள் முறைப்படுத்தப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பண்களிலும் அவற்றுக்குரிய பல கட்டளைகளிலும் பிள்ளையார் அவதரித்த சீகாழிப்பதிக்குரிய திருப்பதிகங்களே முதலிடம் பெற்றிருத்தல் காணலாம். மருதப் பண்ணின் வடுகு என்னும் நிறத்தின் அக நிலையாகிய இந்தளப் பண் இத்திருமுறையில் முதலிடம் பெற் றுள்ளது. இதனை ஊன்றி நோக்குங்கால் தெய்வப் பாடல்கட்குச் சிறப்புரிமையுடைய பண்களுள் இந்தளமும் ஒன்றாகும் என்பது புலனாகும். பாலை நெய்தல் பாடிய காரைகள் கூகை முல்லை (1.84) எனவரும் நனிபள்ளித் திருப்பதிகமும், திருநெல் வாயில் அரத் துறை ஈசர் தந்தருளிய முத்துச் சிவிகை, குடை, சின்னம் முதலிய வற்றைப் பிள்ளையார் பெற்றபோது இறைவனது திருவருளை வியந்து போற்றிய 'எந்தையிசன் (2.90) என்னும் திருப்பதிகமும், திருமருகல் என்னும் தலத்தில், அரவு தீண்டி இறந்த வணிகன் ஒருவனை உயிர் பெற்றெழச் செய்தல் வேண்டி பிள்ளையார் பாடியருளிய சடையெனும் மால் (2.18) என்னும் விடந்தீர்த்த பதிகமும், திருமறைக்காட்டில் கதவம் அடைக்கப் பாடிய சதுரம் மறை (2.37) என்ற பதிகமும், திருமறைக் காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டபொழுது நாளும் கோளும் பற்றிய அப்பரடிகட்கு அமைதி கூறிய வேயுறு தோளி பங்கன் (2.85) எனவரும் கோளறு திருப்பதிகமும், மதுரையில் கூன் பாண்டியனின் வெப்பு நோய் நீங்கப்பாடிய மந்திரமாவது நீறு (2.66) என்னும் திருநீற்றுப் பதிகமும், மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கிய