பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 141 'மட்டிட்ட புன்னையங் கானல் (2.47) என்னும் பூம்பாவைத் திருப்பதிகமும், இந்த இரண்டாம் திருமுறையில் அமைந்த அற்புதத் திருப்பதிகங்களாகும். ‘செந்நெல்கழனி (2.1:1) எனத் தொடங்கும் உலக மக்களுக்குரிய செந்நெல் உணவினையும் நறுமலரினையும் குறிப்பிட்டு இறைவன் திருவருட் குறிப்பறிந்து உயிர்கள் தம்முட் பகையின்றி வாழவேண்டிய நுட்பத்தினையும் அறிவுறுத்தும் திருப்பாடலை முதலாக் கொண்டு தொடங்கிய இரண்டாந் திருமுறை எய்த வொண்ணா இறைவன் (2.122:1) என்ற பாடலைக் கொண்டு நிறைவு பெற்றிருத்தலை நுணுகி நோக்குங் கால் இறைவனது திருவருள் வழி நின்று எல்லா உயிர்க்கும் அன்பாயொழுகும் மெய்யடியார்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும், தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50) என்னும் தமிழ் மறைக்கு இலக்கியமாகச் சிவலோகத்தில் எய்தி இமையோர்கள் போற்ற இன்புற்றிருப்பார்கள் என இறைவன் வழிபாட்டினால் எய்தும் இருமைப் பயன்களையும் அறிவுறுத்தும் முறையில் இத்திருமுறை அமைந்திருத்தல் இனிது புலனாகும். (3) மூன்றாம் திருமுறை இந்தப் பிள்ளையாரின் திருமுறையில் காந்தாரப் பஞ்சமம் பஞ்சமம் கொல்லி சாதாரி கொல்லிக் கெளவாணம் பழம் பஞ்சரம் கெளசிகம் புறநீர்மை அந்தாளிக் குறிஞ்சி என்னும் ஒன்பது பண்களுக்குரிய நூற்றிருபத்தைந்து பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. சிவத்தலங்களுள் சிறந்தது சைவர்களால் கோயில் என்று போற்றப்பெறும் தில்லை (சிதம்பரம்). ஆகவே,