பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 மூவர் தேவாரம் - புதிய பார்வை அத்தலத்துக்குரியதும் காந்தாரப் பஞ்சமம் பண் அமைத்தது மாகிய ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் (3.1) என்ற திருப்பதிகம் இத்திரு முறையின் முதற்கண் வைக்கப் பெற்றது. இதனையடுத்துக் காந்தாரப் பஞ்சமம் என்னும் இப் பண்ணுக் குரிய 'பந்து சேர் விரலாள் (3.2) என்னும் திருப்பூந்தராய் (சீகாழி)த் திருப்பதிகம் அமைந்துள்ளது. இவ்வாறே முதல் திருமுறையில் குறிஞ்சிப் பண்ணின் இரண்டாம் கட்டளையாக அமைந்த திருப்பதிகங்களில் 'கற்றாங் கெரியோம்பி’ (1.80) என்னும் தில்லைப் பதிகம் முன்னும், நல்லார் தீமேவும் (1.81) என்னும் சீகாழித் திருப்பதிகம் பின்னும் அமைந்திருத்தலைக் காணலாம். ஆளுடையார் பிள்ளையார் திருப்பதிகங்களில் முற் குறித்த இரண்டடிகளைத் தவிர ஏனைய எல்லாப் பண்களிலும் கட்டளைகளிலும் சீகாழிப் பதிக்குரிய திருப்பதிகங்களே முதலிடம் பெற்றிருத்தல் ஈண்டு அறியத் தக்கதாகும். ஆளுடைய பிள்ளையார் திருநல்லூர்ப் பெருமணத்தில் தம் திருமணம் காண வந்தோர் அனைவரையும் உடன் அழைத்துக் கொண்டு திருப் பெருமணத் திருக்கோயிலில் தோன்றிய ஈறில் பெருஞ்சோதியினுள்ளே புகும் பொழுது பாடியருளிய திருப்பதிகம் 'நல்லூர்ப்பெருமணம் வேண்டா (3.125) என்னும் பதிகமாதலின் அதனை மூன்றாம் திருமுறையின் இறுதித் திருப்பதிகமாகவும் அப்பதிகத்திற்குரிய அந்தாளிக்குறிஞ்சி என்ற பண்ணினை அத்திருமுறையின் இறுதிப் பண்ணாகவும் முன்னுள்ள சான்றோர் முறைப்படுத்தியுள்ளனர். சம்பந்தப் பெருமான் தமக்கு உபநயனச் சடங்கு நிகழ்ந்த போது மறைநான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்த அந்தணர்க்கு 'அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே (3.22:1) என்று அறிவுறுத்தும் முறையில் அமைந்த பஞ்சாக்கரத் திருப் பதிகமும் (3.22), உலவாக்கிழி பெறும் நிலையில் பாடியருளிய 'இடரினும் தளரினும் (3.4) என்ற திருப் பதிகமும், மதுரையில் அடியார்களுடன் தங்கியிருந்த திரு மடத்தில் சமணர் தீயிலிட்ட போது பாடிய செய்யரே திருஆல்வாய் (3.51) என்ற திருப்