பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 143 பதிகமும், தீயிட்ட கொடுஞ் செயல்களையுடைய சமணரோடு தாம் வாது செய்வதற்கு ஆலவாய்ப் பெருமானின் திருக் குறிப்பை அறியப் பாடிய காட்டுமாவது (3.8) வேதவேள்வியை (3.108) என்ற திருப்பதிகங்களும், சமணர்களுடன் தாம் வாது செய்தபோது தாம் தீயில் இட்ட ஏடு வேவா வண்ணம் நள்ளாற் றிறைவனைப் பரவிப் போற்றிய தளரிளவளர் என உமைபாட (2.111) என்ற திருப்பதிகமும், புனல் வாதத்தில் வையையில் இட்ட ஏடு எதிரேறிச் செல்லுமாறு பாடிய வாழ்க அந்தணர் (3.54) என்னும் பதிகமும், கொள்ளம்பூதூர்' பெருமானை வழிபட விரும்பி முள்ளியாற்று வெள்ளத்தில் நாவலமே கோலாக ஒடம் உய்க்கும் நிலையில் பாடிய 'கொட்டமே கமழும் (3.6) என்ற திருப்பதிகமும், தம் திருமணம் காண வந்தோர் அனை வரும் 'ஈனமாம் பிறவி தீர இறைவன் தோற்றுவித்த ஈறில் பெருஞ்சோதியில் புகுக' என வழி வகுத்துக் காட்டும் கருத்துடன் அருளிச் செய்த 'காதலாகி (3.49) என்னும் நமச்சிவாய திருப்பதிகமும், தம்மைச் சார்ந்தவர்களது தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம் பொருளாகக் கொண்டு நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே நின் பாத மெய்ந்நிழல் சேரும் பருவம் ஈது' என வேண்டி ஈறில் பெருஞ்சோதியினுள் புகும் நிலையில் பாடிய 'கல்லூர்ப் பெருமணம் (3.125) என்னும் திருப்பதிகமும் இம் மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள அற்புதத் திருப்பதிகங்க ளாகும. 4 கொள்ளம்பூதூர் (திருக்களப்பூர்): தஞ்சாவூர் நீடாமங்கலம்... நாகூர் இருப்பூர்தி வழியில் கொரடாச் சேரியிலிருந்து 4 மைல். கோயிலருகில் ஓடுவது முள்ளியாறு. இதன் எதிர்க் கரையில் சம்பந்தர் வந்தபோது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒடம் கோல் நிலைக்காமையால் ஒடத்தைக் கரையிலுள்ள மரத்தில் கட்டி விட்டு ஓடக்காரன் வீட்டிலிருந் தான். சம்பந்தர் ஒடத்தை அவிழ்த்துவிட்டு ஏறிக் கொண்டு கொட்டாமே ( ) என்னும் பதிகம் பாட நாவலமே கோலாக ஒடம் கோவிலருகே சேர்ந்தது.