பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மூவர் தேவாரம் - புதிய பார்வை (4) நான்காம் திருமுறை நாவுக்கரசர் பெருமான் அருளிய திருப்பதிகங்களில் கொல்லி பழந்தக்கராகம் காந்தாரம் பழம் பஞ்சுரம் பியந்தைக் காந்தாரம் இந்தளம் சாதாரி சீகாமரம் காந்தாரப் பஞ்சமம் குறிஞ்சி என்னும் பத்துப் பண்களும் திரு நேரிசை, திருவிருத்தம் என்னும் யாப்பியல் விகற்பமும் அமைந்த திருப்பதிகங்கள் இந் நாலாந்திருமுறையில் முறையே தொகுக்கப் பெற்றன. இவற்றுள் திரு நேரிசை, திரு விருத்தம் என்பவற்றை முறையே நேரிசைக் கொல்லி எனவும், விருத்தக் கொல்லி எனவும் கொல்லிப் பண்ணில் அடக்குதல் மரபு. திருநேரிசை என்பது, கூவிளம் புளிமா தேமா கூவிளம் புளிமா தேமா எனவரும் கட்டளை வடிவினையுடைய செய்யுளாகும். இக்கட்டளையில் முதன் சீரும் நான்காஞ் சீரும் ஒரோ வழிக் கருவிளம் ஆதலும் இரண்டாஞ் சீரும் ஐந்தாஞ் சீரும் தேமா ஆதலும் உண்டெனவும், மூன்றாஞ் சீரும் ஆறாஞ் சீரும் எப்பொழுதும் தேமாவாகவே நிற்பன எனவும் இதன் யாப்பமைதியினை விளக்குவர் யாழ் நூலாசிரியர்". நேரிசை என்னும் இப்பெயர், கீழ்கரக் குறித்த அறுசீர்க் கட்டளையால் அமைந்த யாப்பினைக் குறிப்பதுடன் அமைந்த யாப்பினைக் குறிப்பதுடன் அதனைப் பாடுதற்கமைந்த சுத்தாங்கமாகிய இசையமைப்பினையும் புலப் படுத்தும் முறையில் அமைந்திருத்தல் காணலாம். நேரிசையாக அறுப்பதம் முரன்று (1.75:3) எனவும், 5. யாழ் நூல் - பக்.217