பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 145 நீணமார் முருகுண்டு வண்டினம் நீலமாமலர் கவ்வி நேரிசை பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டுர் (2.53:10) எனவும் சண்பை வேந்தர் திருப்பாடல்களில் நேரிசை என்றும் இவ்விசையமைப்பு குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இக் குறிப்புகளை ஊன்றி நோக்குங்கால், வண்டுகள் நறுமலர்களில் மகரந்தப் பொடியையும் தேனையும் மாத்திரம் அம் மலர்களில் படிந்து இடையீடின்றி முரல்வது போலும், நேரிய இசையமைந்த திருப்பாடல்கள் நேரிசை என்ற பெயர் பெறுவன என்னும் நுட்பம் இனிது புலனாகும். சிவபெருமானுக்கு உவப்பை விளை விக்கும் பண்களுள் கொல்லிப்பண்ணும் ஒன்று என்பதனை, கொல்லியார் பண்ணுகந்தார் குறுக்கைவீரட்டனாரே (4.49:6) என நாவுக்குஅரசர் திருக்குறுக்கைத் திருநேரிசையில் குறித்துள் ளார். தெய்வ வழிபாட்டிற்குரிய இக் கொல்லிப் பண்ணில் திரு நேரிசைப் பதிகங்களைப் பாடும் வழக்கம் உண்டென்பது 'நந்தாத நேரிசையாம் கொல்லியிக்கு என வரும் திருமுறைகண்ட புராணக் குறிப்பால் உணரப்படும். தேவாரத்தில் வரும் இத்திரு நேரிசை யாப்பும் திவ்வியப் பிரபந்தத்தில் வரும் திருக்குறுத் தாண்டக" யாப்பும் ஒன்றே என்று இவ்விரு பனுவல்களிலும் அமைந்த திருப் பாசுரங்களை ஒப்பு நோக்குவார்க்கு இனிது தெளிவாகும். அப்பர் பெருமான் அருளிய திருவிருத்தம் என்பது இக் காலத்தில் கட்டளைக் கலித்துறை என்ற பெயரால் வழங்கப் பெறும் யாப்பாகும். ஐஞ்சீரடி நான்காய் அடிதோறும் முதல் சீர் நான்கும் வெண்டளை பிழையாமல் நிற்க, ஐந்தாம் சீராகிய 6. திருமங்கையாழ்வார் அருளிய பிரபந்தங்களில் ஒன்று (பெரிய திருமொழி காண்க)