பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மூவர் தேவாரம் - புதிய பார்வை இறுதிச்சீர் கூவிளங்காய், கருவிளங்காய் என்னும் சீர்களுள் ஒன்றாகப் பெற்று, முதல் சீரின் முதல் அசை நேரிசையாயின் ஒரடிக்கு எழுத்துப் பதினாறும், நிரையசையாயின் பதினே லெழுத்தும் உடையதாய் வரும் செய்யுள் கட்டளைக் கலித்துறை எனப்படும். இவண் குறித்த வண்ணம் எழுத்தெண்ணி வகுக்கப் பெற்ற கட்டளைத் துறைகளால் இயன்ற செய்யுளாதலின் இது 'கட்டளைக் கலித்துறை என்னும் பெயர் பெற்றது. பிற்காலத்தா ரால் கட்டளைக் கலித்துறை என்ற பெயரால் வழங்கப் பெறும் இச் செய்யுள் தொல்காப்பியர் செய்யுளியலில் விரித்துரைக்கப் பெற்றுள்ள பழைய யாப்பிலக்கணத்தின்படி ஐஞ்சீர் நான்கடியால் வந்த தரவு கொச்சகம் எனப்படும். இதிலுள்ள அற்புதத் திருப்பதிகங்களைக் காட்டுவேன். சமண் சமயத்தைச் சார்ந்த மருள் நீக்கியார் அச் சமயத்தைத் துறந்து திருவதிகையை அடைந்து தம் தமக்கையர் (திலகவதியார்) அளித்த திருநீற்றினைப் பூசி அதிவீரட்டானத்து எழுந்தருளிய பெருமானைப் பணிந்து உரைத்த தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற்று முதன் முதலாகப் பாடியருளிய கூற்றாகினவாறு விலக்ககிலிர் (4.1) என்னும் திருப்பதிகமும், சமணர்கள் தம் மன்னன் துணை கொண்டு இடறச் செய்தபொழுது சிறிதும் கலங்காது இறைவன் திருவருளை நினைந்து போற்றிய சுண்ண வெண் சந்தனச் சாந்து (4.2) என்ற திருப்பதிகமும், சமணர்கள் பெருமானைக் கல்லுடன் கட்டிக் கடலில் தள்ளிய பொழுது அக்கல்லே தெப்பமாக மிதக்கும்படிபாடிய 'சொற்றுணை வேதியன் (4,1) என்ற நமச்சிவாயத் திருப்பதிகமும், தம்மை உய்வித் தருளிய திருப்பாதிரிப் புலியூர் பெருமானைப் பரவிப் போற்றிய 'ஈன்றாளுமாய் (4.94) என்னும் திருப்பதிகமும், தம் 7. நம்மாழ்வார் அருளிய திருவிருத்தம்' என்பது அவர் அருளிய முதல் பிரபந்தம் (100 பாசுரங்களைக் கொண்ட அகத்துறைப் பிரபந்தம்)