பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 147 திரு மேனியில் இடபக்குறி சூலக்குறி என்பவற்றைப் பொறித்து அருளுமாறு பெண்ணாகடத்துத் திருத்துங்காணை மாடத்துப் பெருமானை வேண்டிப் போற்றிய 'பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம் (4.109) என்னும் திருப்பதிகமும், அப்பூதியடிகள் திருமாளிகையில் அரவு தீண்டி மரித்த மூத்த திருநாவுக்கரசு உயிர் பெற்றெழும்படிப் பாடியருளிய ஒன்று கொலாம் (4.18) என்ற திருப்பதிகமும், கயிலை நோக்கிச் சென்ற வாகீசரை இடைவழியில் ஒரு முனிவராய்த் தோன்றி அவர் பணித்தவண்ணம் ஒரு குளத்தில் மூழ்கி திருவையாற்றில் வந்தெழுந்து சக்தியும் சிவமுமாய்த் தோன்றிய தெய்வக் காட்சியைக் கண்டு மகிழ்ந்து பாடிய 'மாதர் பிறைக் கண்ணியானை (4.3) என்ற திருப்பதிகமும் நான்காம் திரு முறையிலுள்ள அற்புதத் திருப்பதிகங்களாம். இத்திருமுறையில் நூற்றுப்பதின் மூன்று திருப்பதிகங்கள் அடக்கம். (5) ஐந்தாம் திருமுறை 'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் (5,1) என வரும் கோயில் திருக்குறுந் தொகை முதலாக வேத நாயகன் (5.100) என்ற ஆதிபுராணத் திருக்குறுந்தொகை ஈறாகவுள்ள நூறு திருப்பதிகங்களின் தொகுதி ஐந்தாம் திருமுறை என வழங்கப்பெறுவது. இத் திருமுறையிலுள்ள பதிகங்கள் யாவும் 'குறுந்தொகை என்னும் ஒரே யாப்பில் அமைந்த திருப் பாடல்களால் இயன்றனவாதலின் யாப்பமைதி கருதி இவற்றை ஒரே திருமுறையாக நம் முன்னோர் முறைப்படுத்தினார்கள். குறுந்தொகை யாப்பு என்பது நாற்சீர் நாலடியாய அடிதோறும் தேமா, புளிமா என்னும் மாச் சீர்களுள் ஒன்று முதற் சீராகவும், கருவிளம், கூவிளம் என்னும் விளச்சீர்களுள் ஒன்று நான்காம் சீராகவும் இடையிலுள்ள இரண்டு மூன்றாம் சீர்கள் பெரும்பாலும் விளச்சீர்களாகவும் அமைய வரும் செய்யுள் விகற்பமாகும்.