பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மூவர் தேவாரம் - புதிய பார்வை சிலப்பதிகாரத்தில் வேட்டு வரியில் வரிப்பாடல்கள்." இக் குறுந்தொகை யாப்புக்குரிய பழைய இலக்கியங்களாகக் கொள்ளத் தக்கனவாகும். இவண் குறிப்பிட்ட அன்னம் பாலிக்கும் (5.1) பாடலையும் இவண் குறிப்பிட்ட வேட்டுவ வரிப்பாடல்களையும் ஒப்பு நோக்குவார்க்கு அப்பர் பெருமான் அருளிய இக்குறுந் தொகை யாப்பு இளங்கோவடிகள் வாழ்ந்த காலப்பகுதியாகிய கி.பி. இரண்ட்ாம் நூற்றாண்டிலேயே நாட்டில் பரவி வழங்கிய தொன்மையுடையது என்பது நன்கு புலனாகும். (ஒரு) மா கூவிளம் கூவிளம் கூவிளம் என்பது திருக்குறுந் தொகை என்னும் செய்யுளின் கட்டளையாகும். முதல் சீர் தேமா வாயின் அடியின் எழுத்துத் தொகை ஒற்று நீக்கிப் பதினொன்றாம்; புளிமா வாயின் பன்னிரண்டாம். ஒரடிக்குள் அமைந்த தளைகளுள் முதல் தளை நேரொன்றாசிரியத்தளை, இரண்டும் மூன்றும் வெண்டளைகள். இவண் குறித்த எழுத்துக் கணக்கும் தளை யமைதியும் வேறுபடாது நிற்கச் சீர்கள் வேறுபட்டு வரலாம்' என இக்குறுந்தொகை யாப்பின் அமைப்பினை விளக்குவர் யாழ் நூலாசிரியர். பத்தெழுத்து முதல் பதினான் கெழுத்தளவும் பெற்று வரும் அளவடியாகிய நாற்சீரடியுள் பதினொன்றும் பன்னிரண்டு மாகக் குறைந்த எழுத்துக்களைப் பெற்று வருவன இப்பாடல் களாதலின் இவை குறுந்தொகை எனப் பெற்றன." சிவபெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருத்தலங்களையெல்லாம் கண்டிறைஞ்சி கைத்திருத்தொண்டு செய்யும் கடமையினை மேற்கொண்ட அப்பர் பெருமான் இறைவ னது பேரருளை நினைந்து ஒரு தலத்திலிருந்து மற்றொரு 8. சிலப்.மதுரை.காடுகாண்-வேட்டுவ வரி காண்க. 9. யாழ் நூல் - பக் 210 10. அளவடி நான்கின கலி விருத்தம்மே (யாப்பருங்கலம் செய்யுளி நூற்.89) என்னும் பிற்கால யாப்பிலக் கணவிதியை யொட்டி இக்குறுந்தொகையைக் 'கலி விருத்தம்' என்ற பாவினத்துள் அடக்குவாரும் உளர்.