பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 149 தலத்திற்கு நடந்து செல்லும் பொழுதும் அவ்வத் தலங்களிலுள்ள திருக் கோயில்களை அடைந்து உழவாரத் தொண்டு முதலிய திருப்பணிகளைச் செய்யும் போதும்', தம் பெருமானாகிய இறைவனை முன்னிலையாக்கிப் போற்றும் நிலையிலும்', அவ் விறைவனது பொருள் சேர் புகழை உலக மக்களுக்கு எடுத் துரைக்கும் நிலையிலும்" பாடிப் பரவுதற்கேற்ற சந்தமாக இக் குறுந்தொகை யாப்பு அமைந்திருத்தல் காணலாம். ஆழ்வார்கள் அருளிச் செயலாகிய நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் திருமங்கை யாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங் களுள் திருக் குறுந் தாண்டகம் என்னும் பனுவல் இடம் பெற்றுள்ளது. (பெரிய திருமொழியில் இது அடக்கம்) (6) ஆறாந்திருமுறை தனக்குவமை இல்லாத தலைவனாகிய முழுமுதற் பொருளின் எண்ணிறந்த திருக் குணங்கள் எல்லாவற்றையும் அப்பெருமான் திருமுன்னரும் தம் முன் உள்ள அன்பர்கட்கும் பிறர்க்கும் தமது நெஞ்சிற்கும் விரித்துரைத்தற்கேற்ற யாப்பமைதி பெற்று விளங்குவன திருத்தாண்டகத் திருப்பதிகங்களாகும். ஆறாம் திருமுறையாகிய இப்பகுதியில் 'அரியானை அந்தணர் தம் சிந்தையானை (6.1) எனத் தொடங்கும் கோயில் - பெரிய திருத்தாண்டகம் முதலாக 'எண்ணுகேன் எனச் சொல்லி எண்ணுகேனோ? (6.99) எனத் தொடங்கும் திருப்புகலூர்த் திருத் தாண்டகம் ஈறாகத் தொண்ணுற்றொன்பது திருப் பதிகங்கள் அடக்கம். 11. பெரி.புரா.திருநாவு.புரா.174 12. மேலது - மேலது - 171 13. மேலது - மேலது - 269 14. தொழற் பாலதே' என்னும் திருக்குறுந்தொகை முதலிய திருப்பதிகங்களின் பாடல் அமைதியை நோக்கி உணர்க.