பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 157 'தென்னென இசைமுரல் சரிதையர் (3.85:6) தெத்தென இசைமுரல் சரிதையர்' (3.85:3) 'தும்பி தெத்தே யெனமுரல. (2.72:5) எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரத் தொடர்களும், தேத்தெத்தா வென்னக் கேட்டார் (4.32:10) எனவரும் திருநாவுக்கரசர் தேவாரத் தொடரும், ‘தென்னாத் தெனாத் தெத்தெனா வென்றுபாடி (7.2.6) எனவரும் சுந்தரர் தேவாரத் தொடரும் முறையே தென்ன, தென்னென, தெத்தென, தெத்தே, தேத்தெத்தா, தென்னாதெனா, தெத்தெனா என்னும் இசைக்குரிய அசைச் சொற்களை எடுத்து ஆண்டுள்ளன. இவ்வாறே, 'தந்த நித்தந் தடமென் றருவித்திரள் பாய்ந்து போய் (2.5:4) எனவும், தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடும். எனவும் வருந்தொடர்களில் தந்த, திந்த, தேம், தாம் என ஆடற்குரிய சதிச் சொற்கள் சிலவற்றை ஆளுடைய பிள்ளையார் குறித்துள்ளார். பிள்ளையார் அருளிய பந்தத்தால் (1.126:1) எனத் தொடங்கும் திருத்தாளச் சதி திருப்பதிகம், இசையுடன் பாடும் அளவிலன்றி, நாடக மகளிர் ஆடரங்குகளில் பாடியாடுதற் கேற்ற பொருள் பொதிந்த தாளச் சொற்கட்டுகளாக அமைந் திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும்.