பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மூவர் தேவாரம் - புதிய பார்வை கட்டளை இயலிசைத் தமிழாகிய, தேவாரத்திருமுறைகளில் ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த திருப்பதிகங்களின் யாப்பு வகையினைக் 'கட்டளை என வழங்குதல் மரபு. கட்டளை என்பது மாத்திரை யளவும் எழுத்தியல் நிலையும் பற்றிச் செய்யுட்களில் அமைந்த ஒசைக் கூறுபாடாகும். சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை உரையில் ஆடல் பாடல் இசையே தமிழே எனவரும் தொடருக்கு 'தமிழ்' என்பதற்கு 'வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தாலே கட்டப்பட்ட ஒசைக் கட்டளைக் கூறுபாடுகளும் என அரும்பத வுரையாசிரியர் விளக்கவுரை கூறுவர். இதனைக் கூர்ந்து நோக்குங் கால் இசைத் தமிழில் வழங்கும் கட்டளை என்ற சொல், செய்யுட்களில் அமைந்த ஒசைக் கூறுபாட்டினையே குறிப்பதென்பது நன்கு துணியப்படும். ஒசைவகையாகிய இக் கட்டளையமைப் பினை அடியொற்றியே இசைப்பாடல்களின் தாளம் முதலிய பண்ணிர்மை அமைதல் இயல்பு. இந் நுட்பம் கட்டளைய கீதக் குறிப்பும்" என வரும் பழம் பாடல் தொடரால் நன்கு புலனால் கண்டு மகிழலாம். ஆசிரியர் தொல்காப்பியனார், பாக்களில் பயிலும் அடிகளை அவற்றில் அமைந்த சீர்வகை பற்றியும், எழுத்தெண்ணியறிதற்குரிய கட்டளை யோசை பற்றியும் பகுத்துக் கூறியுள்ளார். இருசீரடி குறலடி, முச்சீரடி சிந்தடி, நாற்சீரடி நேரடி, ஐஞ்சீரடி நெடிலடி, அறுசீர் முதலாக வரும் அடிகள் கழிநெடிலடி எனப்படும். இங்ங்னமே சீர்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்த அடிகள் சீர்வகையடிகளாகும். இனி நாற்சீர்களால் வரும் அளவடி களையே ஒற்றும் குற்றிய லிகரமும் குற்றியலிகரமும் நீக்கி 17 வட்டனைத் தூசியும் மண்டலமும் பண்ணமைய எட்டுடன் ஈரிரண்டாண் டெய்தியபின் - கட்டளைய கீதக் குறிப்பும் அலங்கார முங்கிளரச் சோதித் தரங்கேறச் சூழ் (சிலப்.அரங்கேற்று. அடியார்க்குநல்லார் உரை மேற்கோள்)