பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 159 நாலெழுத்து முதல் ஆறெழுத்து வரையமைந்த அடிகள் குறளடி எனவும், ஏழெழுத்து முதல் ஒன்பது எழுத்துகள் அளவும் அமைந்த அடிகள் சிந்தடி எனவும், பத்தெழுத்து முதல் பதினான் கெழுத்தளவும் அமைந்த அடிகள் நேரடி எனவும், பதினைந்து முதல் பதினேழெழுத்தளவும் அமைந்த அடிகள் நெடிலடி எனவும், பதினெட்டு முதல் இருபத்தெழுத்தளவும் அமைந்த அடிகள் கழிநெடிலடி எனவும் தொல்காப்பியனார் ஐவகையடி களாகப் பகுத்துரைத்துள்ளார். இங்ங்னம் எழுத்தெண்ணி வகுக்கப்பெற்ற ஐவகை அடிகளை யும் கட்டளையடிகள் என வழங்குதல் மரபு. ஒற்று நீக்கி எண்ணுங்கால் எல்லா அடிகளும் எழுத்தொத்து வரும் கலிப்பா வினைக் கட்டளைக் கலிப்பா எனவும், நெடிலடி நான்கினால் எழுத்தொத்து வரும் கலித்துறையினைக் கட்டளைக் கலித்துறை எனவும், இவ்வாறே கட்டளையாசிரியம், கட்டளை வஞ்சி எனவும் வழங்கும் பாவகைகள் எழுத்தளவாகிய கட்டளை யோசை பற்றிப் பகுத்துரைத்தனவேயாகும். இயற்றமிழில் சீர்வகை பற்றிச் செய்யுட்களின் அமைப்பினைப் பகுத்துணர்தல் எளிது. இசைத் தமிழில் ஓர் எழுத்துமிகினும் குறையினும் இசையமைப்புக்குரிய தாளம் முதலியன மாறுபடும்." ஆதலால் நெடில் குறில் ஆகிய எழுத்தளவு பற்றி இசைப்பாக் களின் அமைப்பினைப் பகுத்துணர்தல் வேண்டும். இங்ங்னம் இசைப்பாக்களின் சந்த அமைப்பினை அறிதற்குரிய கருவியாக தான, தன, தானா, தனா முதலாகவுள்ள அசைச் சொற்கள் இசைத் தமிழ்ப் பாடல்களுக்குரிய சந்தக் குழிப்புச் சொற்களாக இசை யாசிரியர்களால் எடுத்தாளப் பெற்றுள்ளன. 18. சைவ, வைணவ அருளிச் செயல்களில் பாடல்களின் இறுதிச் சீர் யாப்புப் படி சரியாக அமைவதில்லை. சுமார் இருபது விழுக்காடு யாப்புக் குறைவு தென்படும். என் அருமை நண்பர் புதுச்சேரி டாக்டர் இளமுருகனார் (இவர் ஒரு சிறந்த இயல், இசைத் தமிழ் புலவர்) அருளிச் செயல்கள் யாவும் இசைத் தமிழேயாதலால் இறுதிச்சீரை இசையுடன் நீட்டிப்படித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்.