பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மூவர் தேவாரம் - புதிய பார்வை முருகப் பெருமானது பொருள் சேர் புகழைச் சந்தமலிந்த செந்தமிழ்ப் பாடல்களால் பரவிப் போற்றிய அருணகிரி நாதர் தாம் பாடிய திருப்புகழ்ப் பாடல்களின் இயலமைப்பினையும் இசையமைப்பினையும் பின்னுள்ளோர் எளிதில் உணர்ந்து பாடு தற்கு ஏற்ற வண்ணம் தான, தன, தானா, தனா முதலிய இசைக் குரிய அசைச் சொற்களைத் தம் பாடல்களில் இயைத்துப் பாடியுள் ளார். அவ்வாசிரியர்க்கு இசைநெறி காட்டிய மூல இலக்கியங்கள் மூவர் முதலிகள் திருவாய்மலர்ந்துள்ள தேவாரத் திருப்பதிகங் களாகும். எனவே தேவாரப் பதிகங்களுக்குரிய யாப்பமைதி யினையும் நெடில் குறில் என அமைந்த எழுத்துக்களின் மாத்திரையளவினையும் கருத்தில் கொண்டுதான் தான, தன, தானா, தனா முதலியவற்றை வாய்பாடுகளாக வைத்து எழுத் தெண்ணி அடிவகுக்கு முகமாக அவற்றின் கட்டளைகளைப் பிரித்தறிதல் இயல்வதாகும். திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி திருவெருக்கத்தம் புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் பிறந்த இசைச் செல்வியராகிய பாடினியார் ஒருவரைக் கொண்டு மூவர் தேவாரப் பதிகங்களுக்கும் இசையமைத்தார் என்பதும் அவ்வாறு அமைத்த இசை முறையில் இன்ன இன்ன பண்களுக்குரிய பதிகங்கள் இத்தனை இத்தனை கட்டளைகளையுடையன என்பதும் திருமுறை கண்ட புராணத்தில் தெளிவாகக் குறிப்பிடப் பெற்றுள்ளன. திருமுறை கண்ட புராணம் கூறும் முறையில் இன்னின்ன பண்களில் அமைந்த திருப்பதிகங்களின் கட்டளைகள் இத்துணையன என்பதனை விபுலானந்த அடிகளார்" தாம் இயற்றிய யாழ் நூலில் தேவார இயல் என்ற பகுதியில் விரிவாகப் பகுத்துக் காட்டியுள்ளார்கள். அந்நூலில் கூறப் பெற்றுள்ள பகுப்பு முறை யினை அடியொற்றித் தேவாரத்தில் ஒவ்வொரு பண்களிலும் 19. யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்; யாழ்நூல் ஆசிரியர்; சில ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.