பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 161 அமைந்த திருப்பதிகங்களின் கட்டளைப் பகுப்பினைக் தெளி வாகத் தெரிந்து கொள்ளலாம். முதலாந் திருமுறை சம்பந்தர் திருப்பதிகங்களின் கட்டளை வகைகளை முறையே காண்போம். முதல் திருமுறையில் முதற் பண்ணாக அமைந்தது நைவளம் என்னும் நட்டபாடையாகும். தோடுடைய செவியன் (1,1) என்பது முதல் சிலைதான நடுவிடை’ (1.22) என்பது ஈறாக 22 திருப்பதிகங்கள் நட்டபாடை பண்ணில் சேர்க்கப் பெற்றுள்ளன. இப்பதிகங்களில் அமைந்த கட்டளைகள் எட்டு என்பது 'சொல் நட்டபாடைக்குத் தொகை எட்டுங் கட்டளை யாம்' என்னும் திருமுறை கண்ட புராண்த் தொடரால் புலனாகும். நட்டபாடைப் பதிகங்களில் அமைந்த எட்டுக் கட்டளைகளையும் ஆடியிற் கண்டவாறு ஒவ்வோரடியில் வைத்துப் பகுத்துக் காணலாம். நட்டபாடை கட்டளை - 1 தோடு டையசெவி யன்விடை தான தானதன தானன யேறியோர் துவெண் மதிசூடி (1.1:1) தானன தானா தனதானா கட்டளை - 2 தாணுதல் செய்நிறை காணிய தானன தானன தானன மாலொடு தண்டா வரையாறும் (1.1:9) தானன தானா தனதான