பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 163 கட்டளை - 8 பிறையணிபடர் சடைமுடியிடை பெருகியபுன லுடையவனிறை (1.19:1) தனதனதன தனதனதன தனதனதன தனதனதன குறிப்பு: கட்டளை 7இன் மாற்று வடிவமே கட்டளை 8இன் வடிவம். இவண் குறித்த வண்ணம் கட்டளையோசைகளைப் பகுத்துக் காணுமிடத்துத் தானன தானன என்புழி முன்னுள்ள தானன என்பதன் ஈற்றெழுத்து அடுத்த சீரினை அவாவித் தானதனாதன எனப் பிரித்திசைத்தலும் தானன என்பதன் முதலிலுள்ள நெடில் இரு குறிலாகித் தனதன என வருதலும், சில இடங்களில் குறில் விட்டிசைத்து, நெடிலாதலும், இம்முறையே 'தான 'தனன ஆதலும், தனன, 'தான ஆதலும், தானா தனனா ஆதலும், 'தனனா தானா ஆதலும் தானாதன என்ற சீரின் விகற்பங் களாய்த், தன்னாதன, தனதந்தன, தானந்தன, தத்தந்தன, தத்தாதன, தந்தாதன என வருதலும் கட்டளை யோசைக்கு ஏற்ற வண்ணம் ஒத்தவாய்பாடுகளாகக் கொள்ளத்தக்கனவாம். நட்ட பாடைப் பதிகங்களில் வெளிப்படையாகத் தோன்றும் யாப்பு விகற்பங்கள் நான்காம், அவை முறையே 1-3, 4-8, 9-18, 19-22ஆம் பதிகங்களின் யாப்பாகும். இவை ஒவ்வொன்றும் சீர்களின் எழுத்துகள் பிரிந்து இசைத் திறத்தால் இருவகையாகி எட்டுக்கட்டளைகளாயினவாறு காணலாம். இனி, இத்திருமுறையில் நட்டபாடையினை அடுத்து அமைந்த பண் தக்கராகம். இப்பண்ணில் 23-ஆம் பதிகம் முதல் 46-ஆம் பதிகம் வரை இருபத்து நான்கு பதிகங்கள் சேர்க்கப் பெற்றுள்ளன. இவற்றில் காணப்படும் கட்டளை விகற்பங்கள் ஏழாகும். 'இன்னிசையால் தகுந்தக்க ராகத்து ஏழ் கட்டளையாம்' என்பது திருமுறை கண்ட புராணம்.