பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மூவர் தேவாரம் - புதிய பார்வை வகைகளும் ஒத்த ஒசையின ஆதல்பற்றி ஒரு கட்டளையாகவும், நான்காம் யாப்பு ஒரு கட்டளையாகவும், ஐந்தாம் யாப்பு ஒரு கட்டளையாகவும் கொள்ளத் தக்கன. 'காந்தார பஞ்சமத்தினை கட்டளை மூன்றாக்கினார்' எனத் திருமுறை கண்ட புராணம் குறிப்பிட்டிருப்பதைக் கூர்ந்து நோக்குங்கால் காந்தாரப் பஞ்சமப் பதிகங்களை இவண் குறித்த வண்ணம் மூன்று கட்டளைகளாகக் கொள்ளுதலே முன்னோர் கருத்துக்கு ஏற்புடைத்தாதல் நன்கு நன்கு புலனாம். கொல்லி கட்டளை - 1 மண்ணினல் வண்ணம் வாழலாம் வைகலும் (3.24:1) தானனா தானனா தானனா தானனா என வரும். தானனா தனதானா ஆதலும் பொருந்தும், 24 முதல் 36 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. (ஏழாம் திருமுறையில் 37-ஆம் பதிகம் கொல்லிப் பண்ணின் முதல் கட்டளையைச் சார்ந்தாகும்). கட்டளை - 2 கரமு னம்மல ராற்பு னல்மலர் தூவி யேகலந் தேத்துமின் (3.37:1) தனன தானன தான தானன தான தானன தானனா என வரும். தனன 'தான ஆதலும், தானன தனதன. ஆதலும் அமையும், 37 முதல் 39 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. கட்டளை - 3 இவண் குறித்த வண்ணம் ஏழு சீர்களாகப் பிரிந்திசைக்கும் யாப்பினையே, கரமுனம் மலராற்புனல் மலர்தூவியே கலந்தேத்துமின்