பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 195 தனதனா தனதானனா தனதானனா தனதானனா என நாற் சீரடியாகப் பகுத்திசைத்தலும் பொருந்தும். ஆதலின் இப்பகுப்பினைக் கொல்லிப் பண்ணின் மூன்றாவது கட்டளையாகக் கொள்வர் யாழ் நூலாசிரியர்." சுந்தரர் அருளிய ஏழாந் திருமுறையில் 33 முதல் 36 வரை அமைந்த கொல்லிப் பதிகங்கள் இங்கே எடுத்துக் காட்டிய கொல்லிப் பண்ணின் இரண்டு மூன்றாம் கட்டளைகளின் அமைப்பினைத் தழுவியன ஆகும். கட்டளை - 4 கல்லால் நீழல் (3.40) தானா தானா என இருசீர்க் குறளடி நான்கினால் வரும். தானா தானா என்பது 'தனனா தானா' எனவும், தானா தன்னா' எனவும், 'தனனா தனனா எனவும் வருதல் பொருந்தும். 40, 41-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. இருசீர்க் குறளடி நான்கினால் இயன்ற திருப் பாடல்களையுடைய இப்பதிகங்கள் திரு இருக்குக் குறள் என வழங்கும் பெயர்க் காரணம் முன்னர் விளக்கப் பெற்றதை ஈண்டு நினைவு கூர்தல் பாலது. கொல்லிக் கெளவாணம் மூன்றாம் திருமுறையில் 42-ஆம் பதிகம் கொல்லிக் கெளவாணம் என்ற பண்ணுக்கு உரியதாகும். இது, நிறைவெண் டிங்கள் வாண்முக மாதர் பாச நீள்சடை (3.42:1) தனன தான தானன தான தான தானன 27 யாழ் நூல் பக். 242