பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 மூவர் தேவாரம் - புதிய பார்வை என வரும் கட்டளையடியினால் இயன்றது. தனன தான ஆதலும் அமையும். திருமுறைகண்ட புராணத்தில் 'கொல்லிக்கு நாலாக்கி எனக் குறிப்பிட்டதன்றிக் கொல்லிக் கெளவாணமாகிய பதிகம் தனியே ஒரு கட்டளை பெறுமெனக் குறிப்பிடாமையால், இக் கெளவாணப் பதிகத்தையும் கொல்லிப் பண்ணின் கட்டளை யாகக் கொண்டு. 24 முதல் 36 வரையுள்ள பதிகங்கள் கொல்லி யின் முதல் கட்டளை, 37 முதல் 39 வரையுள்ளவை இரண்டாங் கட்டளை, 40, 41-ஆம் பதிகங்கள் மூன்றாங் கட்டளை, கொல்லிக் கெளவாணப் பதிகம் நான்காம் கட்டளை எனக் கருதுதற்கும் இடமுண்டு. எனினும் கொல்லி என்பது மருதப் பெரும் பண்ணின் தவிர் என்னும் திறத்தின் புறநிலையாய்ப் பண்ணிசையில் 70 என்ற எண் பெற்றும், கெளவாணம் என்பது குறிஞ்சிப் பெரும் பண்ணின் அகநிலையாய்ப் பண்ணிசையில் 49 என்ற எண் பெற்றும் நின்ற இருவேறு பண்களாதலானும், இவ்விரு பண்களையும் ஒன்றெனக் கொள்ளின் பண்களின் தொகை நூற்றிரண்டு எனப்பட்டு பண்கள் நூற்று மூன்று என்னும் பழங் கொள்கை வழுப்படுமாதலானும் கொல்லியும் கெளவாணமும் இரு வேறு பண்கள் எனக் கொண்டு கட்டளை வகுப்பதே ஏற்புடையதென்பது யாழ் நூலாசிரியரின் துணிபாகும்." கெளசிகம் 43 முதல் 54 வரையுள்ள பதிகங்கள் கெளசிகப் பண்ணுக்கு உரியன. கெளசிகத்துக்குக் கூறும் வகை கொல்லிலிரண்டாக்கி" எனத் திருமுறை கண்ட புராணம் குறிப்பிடுதலால் இப்பதிகங்கள் இருகட்டளை பெறும் என அறிகின்றோம். கட்டளை - 1 சந்த மார் முலை யாள்தன கூறனார் (3.43:1) தான தானன தானன தானனா 28 யாழ் நூல் - 243