பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 229 கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் புளிமா தேமா என முன்னுள்ள சீர்கள் நான்கும் காய்ச்சீர்களாகவும் பின்வந்த சீர்கள் இரண்டும் மாச்சீர்களாகவும் வருதல் நட்டராகத்தின் இரண்டாங் கட்டளையாகும். 30-ஆம் பதிகமாகிய இது முதல் திருமுறையில் 129 முதல் 132 வரையுள்ள மேகராகக் குறிஞ்சிப் பதிகங்களை யொத்த யாப்பமைதியுடையதாயினும் அப்பதிகங்கள் போன்று தொடர்ந்து செல்லும் ஒழுகிய ஓசையினதாகாது சீர்தோறும் தாள அறுதி பட இடையறவு பட்டிசைக்கும் ஒசையினதாதல் நுணுகி நோக்கத் தக்கதாகும். கொல்லி 31 முதல் 37 வரையுள்ள பதிகங்கள் கொல்லிப் பண்ணுக்கு உரியன. கொல்லிக்கு வேறுவகை மூன்றாக எனத் திருமுறை கண்ட புராணம் குறிப்பிடுதலால் கொல்லிக்கு உரிய பதிகங்கள் மூன்று கட்டளை பெறும் என்பது புலனாகும். கட்டளை - 1 - முந்தை யூர்முது குன்றம் குரங்கனின் முட்டம் (7.31:1) தான தானன தான தனாதன தானா என வரும். தான 'தனன. ஆதலும், தானா தனனா ஆதலும் அமையும். பதின்மூன்று எழுத்துகளால் இயன்ற இக்கட்டளையடி யில் தான தானன என்னும் முதலிரண்டு சீர்களும் தனனாதன என ஒரு சீராக ஒன்றியிசைத்தலும், தான தனாதன என்னும் மூன்றாம் நான்காம் சீர்கள் தானன தானா எனப் பிரிந்திசைத் தலும் பொருந்தும். கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல் (17.32:1) தனனாதன தானன தான தனனா என வருதல் காணலாம். 31, 32-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.