பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23O மூவர் தேவாரம் - புதிய பார்வை கட்டளை - 2 பாறு தாங்கிய காடரோபடு தலைய ரோமலைப் பாவையோர் (7.33:1) தான தானன தான தானன தனன தானன தானனா என வரும் ஈற்றுச்சீர் தனதனா ஆதலும் ஒழிந்த சீர்களிலே தான 'தனன. ஆதலும், அமையும், 32 முதல் 36 வரையுள்ள பதிகங்கள் ஒரே யாப்பின. இவை மூன்றாம் திருமுறையில் கொல்லிப் பண்ணுக்கு உரியனவாக 37 முதல் 39 வரை அமைந்த திருப் பதிகங்களின் யாப்பமைதியினை உடையன. கட்டளை - 3 குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா (7:37:1) தனதனா தானனா தனதன தனதனா என வருவது 37-ஆம் பதிகம். இது மூன்றாந் திருமுறையில் கொல்லிப் பண்ணைச் சேர்ந்த 24 முதல் 36 வரையுள்ள திருப்பதிகங்களை அடியொற்றி அமைந்ததாகும். திருமுறை கண்ட புராணத்தில் சுந்தரர் அருளிய திருப்பதிகங் களைக் குறிக்குமிடத்துக் கொல்லிபண்ணை யடுத்துப் பழம் பஞ்சுரம் என்ற பண் குறிக்கப் பெற்றதே யன்றிக் கொல்லிக் கெளவாணம் என்ற பண் குறிக்கப்பெற வில்லை. இவ்வாறே ஆளுடைய பிள்ளையார் அருளிய பதிகங்களைக் குறிக்குமிடத்தும் கொல்லியின் வேறாகக் கொல்லிக் கெளவாணம் குறிக்கப் பெற வில்லை. ஆயினும் கொல்லியின் வேறாகக் (கொல்லிக்) கெளவாணம் என்ற பண் உள்ளமை நாம் அறிவோம். 'கொல்லிக்கு வேறு வகை மூன்றாக் எனத் திருமுறை கண்ட புராணம் குறிப்பிடுதலைக் கூர்ந்து நோக்குங்கால் கொல்லிப் பண்ணுக்கு உரிய கட்டளைப் பதிகங்களும் அக் கட்டளையின்