பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 231 தொடர்புடைய கொல்லிக் கெளவாணப் பண்ணுக்குரிய திருப் பதிகங்களும் உள என்பது குறிப்பாற் புலனாதல் காணலாம். கொல்லிக் கெளவாணம் இத்திருமுறையில் 38 முதல் 41 வரையுள்ள பதிகங்கள் கொல்லிக்கெளவாணப் பண் அமைந்தன. இப் பதிகங்களுக்குரிய யாப்பு விகற்பங்கள் நான்காகும். யாப்பு - 1 தம்மானை யறியாத சாதிய ருளரே சடைமேற்கொள பிறையானை விடை மேற்கோள் விகிர்தன (7.38.1) என எண் சீரடியால் வரும் காய் காய் காய் மா காய் காய் காய் மா என்பதனை இதன் கட்டளையடியாகக் கொள்ளலாம். 38, 39, 40, 46 பதிகங்கள் ஒரே யாப்பின. இப் பதிகங்களில் 'சாதிய்யார்' வெல்லும்மா என ஓர் ஒற்றெழுத்தினைப் பெய்து காய்ச்சி கொள்ள வேண்டிய இடங்களும், தில்லை - வாழ் இல்லை - யே' என ஐகாரத்தை இரண்டு மாத்திரையுடையதாகக் கொண்டு காய்ச்சீர் கொள்ள வேண்டிய இடங்களும் 'வம்ப-றா எம்பி-ரான் எனக் குற்றெழுத்தினை விட்டிசைத்துக் காய்ச்சீர் கொள்ள வேண்டிய இடங்களும் உள. யாப்பு - 2 முதுவா யோரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே (7.4.11) தனனா தானா தனன தன்னா தனனா தானா தனதானா என வருவது 41-ஆம் பதிகமாகும்.