பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 39 அதனைத் தடுத்தருளி, யாழைத் தம் கையில் வாங்கிக் கொண்டு, ‘ஐயரே, நீவிர் யாழை முறிக்கப் புகுதல் முறையா? சிவபெருமானின் திருவருட் பெருமையெல்லாம் கேவலம் இக்கருவியில் அடங்க முடியுமா? சிந்தையால் அளவுபடாப் பதிக இசை செயலளவில் எய்தாது. ஆகவே நீவிர் இந்தயாழினைக் கொண்டே இறைவனின் திருப்பதிக இசையினை வந்தவாறு பாடி வாசிப்பீராக" என்று கூறித் தம் கையிலுள்ள யாழைப் பாணர் கையில் திரும்பக் கொடுத் தருளுகின்றார். இந்தப் பதிகம் 'வியாழக் குறிஞ்சி' என்ற பண்ணி லுள்ளது. ஆனால் இதுவே ஒரு யாழை முரிக்கக் காரணமா யிருந்தமையால் “யாழ்முரி" என்ற பெயரைப் பெறுகின்றது. தருமபுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனும் யாழ்முரிநாதர்' என்ற பெயரைப் பெறுகின்றார். யாழ்ப்பாணரும் அதனைப் பெற்றுக் கொண்டு என்றும்போல் தமக்குரிய இசைத் தொண்டினை மேற் கொள்ளுகின்றார். (9) விடந்தீர்த்தல்: பல பதிகளையும் சேவித்துச் செங்காட்டங் குடியில்’ தங்கியிருந்த போது சிறுத்தொண்ட நாயனார் 22.யாழ்முரி: முரி என்பது ஒரடியில் தொடங்கிய யாப்பியலையும் இசை நடையையும் அவ்வடியிலே முரித்து மாற்றி மற்றொரு யாப்பியலும் இசை நடையும் அமையப் பாடப்பெறுவதாகிய இசைப்பாட்டு. இதனை 'முரிவரி என்றும் கூறுவதுண்டு. இதன் இலக்கணத்தை எடுத்த இயலும் இசையும் தம்மின் முரித்துப் பாடுதல் முரியெனப் படுமே. என்ற சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் காட்டிய மேற்கோள் நூற்பாவால் நன்குணரலாம். இங்ங்னம் விரைவில் முரிந்து மாறும் இயலிசை நடையமைந்த வரிப் பாடலை யாழ் முதலிய இசைக் கருவிகளில் வாசித்துக் காட்டுதல் இயலாததாகலின் முரியாகிய இந்த இசைப்பாடலை யாழ்முரி என்ற பெயரால் வழங்குதலும் உண்டு. 23.திருச்செங்காட்டங்குடி. நன்னிலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 6 கல் தொலைவு. சிறுத்தொண்ட நாயனார் பிள்ளைக் கறி அளித்த அற்புதத் தலம்.