பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மூவர் தேவாரம் - புதிய பார்வை எதிர்கொண்டு போற்றி உபசரிக்கப் பெற்று திருமருகல்" என்னும் தலத்தையடைந்து இறைவனை வழிபட்டு அங்கு அமர்ந்திருக் கின்றார். அப்போது திருக் கோயிலுக்கு அருகிலுள்ள திருமடத்தில் அரவு தீண்டி இறந்து விடுகின்றான் யாரோ ஒர் இளைஞன். இந்நிலையில் அவனுடன் வந்த கன்னிப்பெண் அவனைத் தீண்ட வும் மாட்டாதவளாய் அழுதரற்றுகின்றாள். இவ்வழுகுரலைக் கேட்ட ஊரவர் சிலர் விடந்தீர்க்கும் மந்திரவல்லாரை அழைத்து வந்து மந்திரித்துப் பார்த்தும் விடம் இறங்கவில்லை. ஆகவே அத்தலத்து இறைவனை நினைந்து அரற்றுகின்றாள். இந்த அழுகையொலி வைகறைப் பொழுதில் மருகற் பெரு மானை வழிபட வந்த பிள்ளையாரின் திருசெவியில் அணை கின்றது. அவரும் அவள் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்து அவளை நோக்கி, 'பெண்ணே, நீ அஞ்சற்க. நின் இடுக்கண் இதுவெனக் கூறுக" என்று பணிக்கின்றார். இவ்வாறுதல் மொழி கேட்ட அக் கன்னிப்பெண் பிள்ளையார் திருவடிகளில் வீழ்ந்து கண்ணிர் சொரிய தன் வரலாற்றை எடுத்துரைக்கின்றாள். 'அருளுடையீர், என் தந்தை தாமன் என்பவர் வைப்பூரைச் சேர்ந்தவர். இப்போது அரவு தீண்டி ஆருயிர் நீங்கிய இவர் எந்தையின் மருகர் எந்தைக்கு என்னுடன் பெண் பிள்ளைகள் எழுவர்; அவர்களுள் மூத்த பெண்ணை இவருக்குத் தருவதாக உறுதி கூறிய எந்தையார் சொல் தவறி பொருள் ஆசையில் பிறர் ஒருவருக்கு மணம் முடித்தனர். என்னையொழிந்த ஏனைய மகளிரும் இவ்வாறே ஒவ்வொருவராகப் பிறருக்கே மணம் செய்விக்கப் பெற்றனர். எந்தையை நம்பித் தளர்வுறும் இவருக் காகப் பரிவுற்ற நான் உறவினர் ஒருவரும் அறியாத வண்ணம் 24. திருமருகல் நன்னிலத்திலிருந்து 7 கல் தொலைவு. விடந்தீண்டிய செட்டிப் பிள்ளையை உயிர்ப்பித்து அவனுடன் வந்த பெண்ணை அவனுக்கே சம்பந்தர் மணம் முடித்து வைத்த அற்புதத்தலம். மருகல் என்பது வாழை, வாழை தான் தல விருட்சம். ஆனால் இது கல் வாழை, சுவாமிக்கு நிவேதனம் செய்யலாம்; யாரும் சாப்பிடக் கூடாது. கோயில், மாடக் கோயில்,