பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 41 இவருடன் இல்லத்தை விட்டு வெளியேறினேன். இவரும் இங்கு அரவு தீண்டியதால் இறந்தார். என் செய்வேன் பாவியேன்? துன்பத்திற்குத் துணையாவார் ஒருவருமின்றித் தவிக்கின்றேன். இந்நிலையில் சுற்றத்தவர்போல் இங்குத் தோன்றி என் துயர் நீங்க அருள் செய்தீர்' என்று போற்றி நிற்கின்றாள். இத்துயரச் செய்தி கேட்டு நெஞ்சு நெகிழ்ந்து இளகிய காழிப் பிள்ளையார், 'அஞ்சற்க, உனக்கு எல்லாம் நன்மையாகவே முடியும்' என்று தேற்றி, திருமருகளில் கோயில் கொண்டு எழுந் தருளிருக்கும் பெருமானைப் பணிந்து "சடையாய் எனுமால்' (2.18) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை வழிபடுகின்றார். - சடையாய் எனுமால், சரண்நீ எனுமால்; விடையாய் எனுமால், வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். 'பெருமானே, இந்த ஒள்ளிழையாள் உளம் மலிந்து வருந்துதல் அருட்கடலாகிய நினது திருவுள்ளத்திற்குத் தகுவதாமோ?' என்று முறையிடு கின்றார். இன்னொரு பாடல் (7) இது: வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகற் பெருமான் தொழுவாள் இவளைத் துயராக் கினையே (7) இதில் கன்னிப்பெண்ணின் நிலையை எடுத்துக் கூறுகின்றார். இந்நிலையில் அரவு தீண்டப் பெற்ற இளைஞன் விடந் தீர்ந்து உயிர் பெற்றெழுகின்றான், இதனைக் காணும் அடியார் கூட்டம் வாழ்த்துகின்றது. கன்னியும் இளைஞனும் பிள்ளையார் திருவடி களில் வீழ்ந்து பணிகின்றனர். புகலிப் பெருமானும் அவர்கட்கு