பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மூவர் தேவாரம் - புதிய பார்வை மணம் புணரும் பெருவாழ்வை வகுத்தருளிப் பெருமை அடை கின்றார். இத் திருப்பதிகமும் அகத் துறையில் அமைந்துள்ளது. மருகற் பெருமானைக் காதலித்த மங்கையொருத்தியின் ஆற்றாமை கூறிச் செவிலி இரங்கல் என்னும் துறையில் அமைந்துள்ளது. அருளாசிரியர்களின் அருளிச் செயல்கள் யாவும் மந்திரங்க ளாதலின், வணிக இளைஞன் உயிர் பெற்றெழுகின்றான் என்று கொள்வது ஏற்புடைத்து. (10) மறைக்கதவம் அடைத்தல்: ஆளுடைய பிள்ளை யாரும் திருவிழிமிழலையினின்றும் புறப்பட்டுத் திருவாஞ்சியம்’ முதலான பல தலங்களைப் பணிந்து பாடி அன்பர்கள் எதிர் கொண்டு போற்றத் திருமறைக் காட்டை" அடைகின்றனர். திருமறைக்காட்டுப் பெருமக்களும் அடியார்களும் இவர்கள் வருகையை அறிந்து ஊரைக் கமுகு வாழை மரங்களாலும் தோர ணங்களாலும் அலங்கரித்து குடந்தீபங்கள் வார்முரசம் முதலிய மங்கல நாதங்கள் மல்க எதிர்கொண்டு வரவேற்கின்றனர். இரு பெருமக்களும் மறைக்காட்டுத் தொல்லை மூதூர் புகுந்த போது 'அரஹர' என்று மாதவர்களும் மறையவர்களும் எடுத்த ஓசை இரு விசும்பும் திசையெட்டும் பொங்கி எழுகின்றது. மறைக்கதவம் திறத்தலும் அடைத்தலும் இருபெரு மக்களும் திருமறைக் காட்டுத் திருக் கோயிலை வலஞ்செய்து கோபுரத்தில் நுழைந்து முன்றில் வாயிலை அணுகுகின்றனர். 25. திருவாஞ்சியம். நன்னிலத்திலிருந்து ஆறுகல் தொலைவிலுள்ளது. காசிக்கு நிகர் எனப்படும் தலங்களுள் ஒன்று. 26. மறைக்காடு (வேதாரண்யம்) சப்த விடங்கங்களுள் ஒன்று புவன விடங்கர்; ஹம்சபாத நடனம், வேதங்கள் பூசித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளைப் பதிகம் பாடி, அப்பர் திறக்கவும் சம்பந்தர் மூடவும் செய்த அற்புதத் தலம், தேவாரம் வேதத்திற்குத் தாழ்ந்ததல்ல என்பதைக் கட்புலனாக உலகுக்குக் காட்டிய தலம். மேலைக்கோபுரவாயிலுக்கு எதிரிலுள்ள விநாயகர் சந்நிதி மிகுபுகழ் வாய்ந்தது.