பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-6 திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 63 இந்த அற்புதம் நிகழ்ந்த பொழுது பிள்ளையாரின் வயது பதினாறு. பூம்பாவையைக் கண்ட சிவநேசர் பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றார். பூம்பாவையும் சிவ பெருமானைப் பணிந்து ஞானக்கன்றை வணங்கி நிற்கின்றாள். ஞானக்கன்றை வணங்கி நிற்கும் சிவநேசர் 'அடியேன் பெற்றெடுத்த பூம்பாவையைத் தேவரீர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என வேண்டுகின்றார். இதனைச் செவி மடுத்த பிள்ளையார். 'அன்பீர், நீவிர் பெற்றெடுத்த பெண் விடத்தால் மரித்த பின்பு, யாம் மீண்டும் பிறக்கச் செய்தோம். ஆகவே, இவள் எமக்கு மகளாகின்றாள். எனவே இவளை மணத்தல் தகாது' என்று மறுக்கின்றார். சிவநேசருக்கும் அவர்தம் உறவினருக்கும் மறைமுறையினை எடுத்துரைத்து அவர்தம் மயக்கத்தைப் போக்குகின்றார். பிள்ளையார் செப்பிய உரைதக்க தென உணர்ந்த சிவநேசர் பிறருக்கும் மணம் கூட்ட இசைவின்றித் தம் மகளைக் கன்னிமாடத்தே இருக்கச் செய்கின்றார். பூம்பாவை யும் சிவனருளைச் சிந்தித்திருந்து சிவப்பேறு அடைகின்றாள் என்பது வரலாறு. - (15) ஈறில் பெருஞ்சோதியில் கலத்தல்: முதலில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெருமான் இறுதியில் 'திரு வருள் இதுவாயிருப்பின் நடைபெறட்டும்' என்று உடன்படு கின்றார். பெரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. விவரம் வேண்டுவோர் என் நூலில் கண்டு கொள்ளலாம்!" திருமணம் நடைபெற்ற இடம் 'நல்லூர்ப் பெருமணம்'. காழி வேந்தர் உற வினர்கள் தொண்டர் பெருமக்கள் சூழ பெருமணத் திருக் கோயிலை நோக்கி நடக்கின்றார் தம் துணைவியாருடன்." 43. “ஞானசம்பந்தர் - பக் 30 - 311. பிள்ளையார் திருமணக் கோலங்கொண் டதையும் அவர் சிவிகை மீதமர்ந்து தெருவில் உலாவரும் காட்சியையும் சேக்கிழாரின் தெய்வத் தமிழில் படித்து அநுபவிக்க வேண்டும் (பெரி.புரா. ஞானசம்பந்.புரா 1210 - 1230