பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மூவர் தேவாரம் - புதிய பார்வை திருக்கோயிலை அடைந்தவுடன், பெருமணம் மேவிய பெம்மானை நோக்கி, 'பவமற என்னை முன்னாள் ஆண்ட அப்பண்புகூட, நவமலர் பாதம் கூட்டும்' என்னும் நல்லுணர்வுடன் தமது திருமணத்தைக் கண்டோரது பிறவிப் பாசத்தை நீக்குதலையே பொருளாகக் கொண்டு கல்லூர்ப் பெருமணம் (3.125)" என்ற முதற்குறிப்பினை யுடைய திருப்பதிகத்தால், 'நாதனே! நல்லூர் மேவும் நம்பனே! நின் திருவடி சேரும் பருவம் இதுவாகும்' என்று உளமுருகப் போற்றுகின்றார். கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில சொல்லூர் பெருமணம் சூடலரே தொண்டர் நல்லூர்ப் பெருமணம் மேயகம் பரனே (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். அப்பொழுது பேரருட் கடலாகிய சிவபெருமான் நல்லூர்ப் பெருமணக் கோவில் தன்னுள் ஒடுங்கும்படியாக அதற்கு மேலோங்கிய தூய பெருஞ்சோதிப் பிழம்பாகத் தோன்றி நிற்கின்றார். பிள்ளையாரை நோக்கி 'ஞானசம்பந்தனே, நீயும் பூவையன்னாளாகிய நின் துணைவியும் இங்கு நின்புண்ணிய மணத்தைக் காண வந்தார் அனைவரும் இந்தச் சோதியுள் வந்து சேர்மின்' என்று திருவாய் மலர்ந்து அச்சோதியுட் புகுதற்கென்று வாயிலொன்றையும் வகுத்துக் காட்டுகின்றார். புகலிமன்னரும் 44. நல்லூர்ப் பெருமணம்: சிதம்பரத்துக் கருகிலுள்ள கொள்ளிடம் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. இதைத் திருமண நல்லூர் என்று சொல்வதும் உண்டு. மக்கள் வழக்கில் ஆச்சாள்புரம் என்று பெயர். சம்பந்தர் திருமணம் நடைபெற்ற தலம். திருமணத்திற்கு வந்த அனைவரும் ஈறில் பெருஞ்சோதியில் கலந்து வீடுபேறு அடைந்தனர். இத்திருமணத்திற்கு சம்பந்தரின் கெழுதகை நண்பர் நாவுக்கரசர் ஏன் வரவில்லை என்பது அறியக் கூட வில்லை. திருநல்லூரில் வாழும் நம் பாண்டாரின் திருமகள் தான் சம்பந்தப் பெருமானின் மணப்பெண்.