பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 65 அச் சோதியைத் தொழுது நின்று மாயிருஞாலம் உய்ய வழி யினைக் காட்டும் பாங்கில் "ஞான மெய்ந்நெறிதான் யார்க்கும் நமச் சிவாயச் சொல்லாம்' என்று "காதலாகிக் (3.49) என்ற முதற்குறிப்புடைய நமச்சிவாயப் பதிகத்தை வானமும் நிலமும் கேட்க அருளிச் செய்து" இம்மணத்தில் வந்தோர், ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக' என்று அனைவரையும் அன்பால் அழைத் தருள்கின்றார். இப்பதிகம் முழுவதையும் அடிக்கடி நாம் பாடி அநுபவித்தால் 'பந்தபாசங்களை அறுத்து' எறியலாம். காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. (1) என்பது இதன் முதல் திருப்பாடல். பிறவிப் பெருங்கடலில் அல்லல் பட்டுத் தத்தளிக்கும் மக்கள் திருஞானசம்பந்தரின் திருமணத்தைக் கண்டு உடன் சேவித்துச் செல்லும் நற்பேற்றினாலே அங்குத் தோன்றிய பெருஞ் சோதியில் புகுந்து பிறவா நெறியாகிய பேரின்ப வாழ்வைப் பெறுகின்றனர். திருநீல நக்கநாயனார், முருக நாயனார் சிவபாத விருதயர், நம்பியாண்டார் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலிய திருத்தொண்டர்கள் தங்கள் இல்லக் கிழத்தியருடனும் உறவினர் களுடனும் சோதியுள் புகுகின்றனர். பிள்ளையாரின் பரிசனங் களும் ஆறுவகைச் சமயத்தினராகிய அருந்தவர்களும், அடியார் களும், முனிவர்களும் முத்துச் சிவிகை சுமந்தவர்கள் உட்படப் பிறரும் இறைவன் காட்டிய பெருஞ்சோதியில் கலந்து இன்புறு கின்றனர். இங்ங்னம் திருமணம் காண வந்த் அனைவரும் பெருஞ் சோதியிற் புகுந்த பின்னர் பிள்ளையார் தம் காதலியாரைக் கைப்பிடித்து இறைவனது எழிற் பெருஞ்சோதியை வலம் வந்து சிவபெருமானுடன் ஒன்றி உடனாகின்றார். 45. இது பொதுப்பதிகம்