பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மூவர் தேவாரம் - புதிய பார்வை இதனைச் சேக்கிழார் பெருமான் காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலஞ் செய்தருளித் தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர் நாதனெழில் வளர்சோதி நண்ணியதன் உட்புகுவார் போனநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்" என்று காட்டுவர். உடனே எழில் வளர் சோதி மறைகின்றது. திருக்கோயில் முன்போலவே காட்சியளிக்கின்றது. காலந்தாழ்த்து வந்தவர்கள் சோதியிற் புகும் நட்பேறின்றிக் கலங்கி நிற்கின்றனர். விண்ணவர் முனிவர் முதலியோர் தமது ஏசறவு தீர இறைவனை ஏத்தி மகிழ்கின்றனர். இது வரலாறு. சைவ சமய வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஓர் ஒப்பற்ற தனிநாயகன் சம்பந்தப் பெருமான். மூன்று வயதிலேயே இறையருளால் செந்தமிழ்ப் பாடல்கள் பாடும் ஆற்றல் பெற்றுத் தமிழக வரலாற்றில் ஒரு பெரும் புரட்சி செய்த ஞானக்கன்று காழிப்பிள்ளையார். அருமறை அந்தணர் குலத்தில் பிறந்தவ ராயினும் தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பெறும் திருநீலகண்ட யாழ்ப்பாணரைப் பாராட்டி அவர்க்குச் செய்த சிறப்பும் மரியாதை யும், திரு நீலநக்கர் இல்லத்தில் பாணருக்கு மிக உயரிய நிலை அளிக்கச் செய்து மறைமுகமாகச் சமூகப் புரட்சி செய்ததும் இக் காலச் சமூகச் சீர்திருத்த வாதிகள் வைத்துப் போற்ற வேண்டியவை யாகும். பழங்காலத்தில் சைவ வைணவ ஆசாரியப் பெருமக்கள் தாழ்த்தப் பெற்ற" குலத்தார்களையும் வேறுபாடுகாட்டாமல் போற்றியதைப் பிற்காலத்தார் மறந்து விட்டனர். இன்று இப் பிரச்சினை அரசியல் - சமூக இயல் பிரச்சினையாக விசுவரூபங் கொண்டு விட்டதைக் காண்கின்றோம். 46. பெரி.புரா. ஞானசம்பந்.புரா. 1253 47. வைணவர்கள்ளு இவர்கட்குச் சூட்டிய பெயர் திருக்குலத்தார் என்பது.