பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 2. திருநாவுக்கரசர் தேர்ந்தஉளத் திசைமிகவும் தித்தித் தூறும் செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம் தந்தபெருந்தகையேதம் தந்தையேஉள் கூரத்தமதி நிறைவேஎன் குருவே எங்கள் குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம் தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனே - இராமலிங்கர் (திருஅரு. ஐந்திருமுறை ஆளுடைய அரசுகள் அருள்மாலை - 10) நடு நாட்டில் திருவாமூர் என்பது ஒரு சிற்றுர். அவ்வூரில் வேளாண் மரபில் வந்த புகழனார் என்பவருக்கும் மாதினியார் என்பவருக்கும் பெண் மகவு ஒன்றும் ஆண் மகவு ஒன்றும் பிறக்கின்றன. பெண் மகவுக்குப் பெற்றோர் இட்ட பெயர் திலகவதியார்; ஆண் மகவுக்கு இட்ட பெயர் மருள் நீக்கியார். இவரே திருநாவுக்கரசர்.