பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மூவர் தேவாரம் - புதிய பார்வை இளமையில் இருவரும் நற்கல்வி பெறுகின்றனர். இளமை யில் பெற்றோரை இழக்கின்றனர். திலகவதியாருக்கும் கலிப்பகையார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பெறுகின்றது. ஆனால் போரின் நிமித்தம் வடநாட்டுக்கு சேனைத் தலைவராகச் சென்ற கலிப்பகையார் போரில் இறந்து படுகின்றார். திலகவதியார் தம்பியார் பொருட்டு உயிர் வாழ்கின்றார். திலகவதியார் அதிகை வீரட்டானச்"சிவன் கோயிலில் திருவலகிடுதல் போன்ற நற்றொண் டில் ஈடுபட்டுத்தம் வாழ்க்கையைத் தவநிலையாக்கிக் கொள்கின்றார். தம்பியாரையும் சிறப்புடன் வளர்த்துச்சிறந்த கல்விமானாக்குகின்றார். தீப் பேற்றின் காரணமாக சமணத்துறவிகளின் பிரச்சார வலையில் சிக்கி சமண சமயத்திற்கு மாறுகின்றார் மருள் நீக்கியார். அங்கு தருமசேனர் என்ற பெயரைத் தாங்கி அரும் பணியாற்று கின்றார். இவர் புத்தரில் ஒரு சாராராகிய தேரரை வாதில் வென்று அமண் சமயத் தலைமையினில் மேம்படுகின்றார். சமண சமயத்தைச் சார்ந்த அரசன் தான் சார்ந்த சமயத்தைப் பரப்பு வதற்கு திறமை மிக்க தருமசேனரை நன்கு பயன்படுத்திக் கொள்ளுகின்றான். கருணாமூர்த்தியான கண்ணுதலப்பனின் அருள் வெள்ளம் தருமசேனர்மீது பாயத் தொடங்குகிறது. (1) சூலை நோயால் மாற்றம்: சிவபெருமான் திருவருளால் தருமசேனருக்குச் சூலைநோய் ஏற்படுகின்றது. இந்நோய் வடவைப் பெருந்தீயும் ஆலகால விடமும் வச்சிரப் படையும் ஒன்று சேர்ந்து விளைவிக்கும் கொடுமையை விடக் கொடுமை யாக வருத்துகிறது. இந்த நோயைத் தாங்க முடியாமல் பாழியறை யில் மயங்கி வீழ்கின்றார். தாம் சமண்சமயத்தில் கற்ற மந்திரங்களை யெல்லாம் கையாண்டு பார்க்கின்றார்; நோய் தணிந்த பாடில்லை. மாறாக, அம் மந்திரங்களால் நோய் முடுகி வருந்துகின்றது. தரும சேனர் படும்பாட்டைக் கண்ட சமணர்களும் ஒன்று கூடிக் கவலைப் 48. அதிகைவீரட்டானம்; (திருவதிகை) பண்ணுருட்டியிலிருந்து 2 கல் தொலைவு. திலகவதியார் சரியைத் தொண்டு செய்த அருமைத் தலம். அட்ட வீரத்தலங்களுள் இது திரிபுரம் எரித்த வீரட்டம் (அப்பர் தேவா.5.53:4). அருகில் கெடில நதி ஓடுகின்றது. இத்தலத்தில் ஆண்டுதோறும் திரிபுரதகன உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.