பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 69 படுகின்றனர். தம் கையிலுள்ள குண்டிகை நீரை மந்திரித்துக் குடிப் பிக்கின்றனர். மயிற்பீலி கொண்டு காலளவும் தடவுகின்றனர். இத னால் நெய்யிட்ட நெருப்பு மேலும் பெருகி எரிவதுபோல், நோய் பன்மடங்கு அதிகரிக்கின்றது. சோர்வுற்ற சமணர்கள், கலங்கிய உள்ளத்தினராய் தரும சேனரைக் கைவிட்டு அகன்று போகின்றனர். ஆழ்ந்து எண்ணிய தரும சேனர் சிவபெருமானின் திருவரு ளும் கூடப் பெறுவதால் இம்மைக்கும் மறுமைக்கும் ஒவ்வாத சமண் சமயத்தைத் துறந்து தம் தமக்கையாரிடம் திரும்ப எண்ணு கின்றார். அங்ங்னமே அப்பெருமாட்டி எழுந்தருளியிருக்கும் திருமடத்திற்கு ஒருவரும் காணாதபடி நள்ளிரவில் வந்து சேர்கின்றார். தமக்கையாரும் கயிலைப் பெருமானின் திருவடி களை நினைந்து ஐந்தெழுத்தினை ஓதி திருநீற்றினைத் தந்தருள் கின்றார். அதனைத் தம் திருமேனி யெங்கும் பூசிக் கொண்டு தம் தமக்கையாருடன் திருவதிகைத் திருக்கோயிலுக்குச் செல்லுகின் றார். திருக் கோயிலைத் தொழுது வலங்கொண்டு நில மிசை வீழ்ந்து திருவதிகை வீரட்டானத்து இறைவனை இறைஞ்சு கின்றார். இந்நிலையில் இறைவன் திருவருளால் செந்தமிழ்த் தமிழ் மாலைகளைப் பாடிப் போற்றும் உணர்வு அவருக்கு உண்டாகின் றது. தம் சூலைநோய் நீங்கும் பொருட்டு திருவதிகைப் பெருமானை 'கூற்றாயினவாறு (4.1) என்ற முதற் குறிப்பினையுடைய செந்தமிழ்ப் பாமாலையை உள்ளத்தில் பேரன்பு பொங்கப் பாடிப் போற்றுகின்றார். கூற்றாயின வாறு விலக்ககிலிர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றி னகம்படியே குடரொடு நுடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத் துறையம் மானே (1) என்பது இத்திருப்பதிகத்தின் முதற் பாடல். நிலைபெற்ற பெரு வாழ்வைத் தரும் இத்திருப்பதிகத்தைப் பாடிய பொழுது அவர்தம்