பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மூவர் தேவாரம் - புதிய பார்வை வயிற்றில் புகுந்து வருத்திய சூலைநோய் விரைவில் நீங்கிவிடு கின்றது. மருள் நீக்கியாரும் இறைவனின் கருணைக் கடலில் மூழ்கித் திளைக்கின்றார். இந்நிலையைச் சேக்கிழார் பெருமான் மிக அற்புதமாகக் காட்டுவார்." இறைவனது திருவருள் அடியேற்கு உயிருடன் நலத்தையும் அருளியது' என மகிழ்ந்து முதல்வனின் கருணைக் கடலில் மூழ்கி இன்புறுகின்றார். மெய்மயிர் சிலிர்க்க, கண்ணிர் மழையெனப் பொழிய, நிலமிசை வீழ்ந்து புரள்கின்றார்; என்றும் வெள்ளம் ஏறாத பெருந்திடர் என அமைந்த எளியேன்பால் இவ்வாறு நின் திருவருள் பெருவெள்ளத்தைப் பெருக்கி விடுதல் தகுமோ?' என இறைவனை உளங் கசிந்து போற்றுகின்றார். 'பொய்ம்மை மிக்க புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்து எழுமாறு, இதுவென உணராது மயங்கி அவமே செய்து கிடக்கும் எளியேன் மாமலையாள் மணவாளன் திருக்கழல்களை அடைந்து உய்யும் வண்ணம் இத்தகைய நல்வாழ்வைத் தந்த சூலை நோய்க்குச் செய்யத் தக்க கைம்மாறு யாதுள்ளது?’ என்று தம்மை நல்வழிப் படுத்துவ தற்குக் காரணமாய் அமைந்த சூலை நோய்க்கு நன்றி தெரிவித்து இறைவனைத் தொழுகின்றார்." இந்த நிலையில் 'செந்தமிழ்ப் பதிகம் பாடிய பான்மையினால் நின்பெயர் "நாவுக்கரசு' என உலகேழினும் நிலை பெற்று வழங்குவதாகுக' என இறைவனின் திருவருள் வாக்கு யாவரும் கேட்கும் வண்ணம் வானில் எழுகின்றது. இத் திருவருள் மொழியினைச் செவிமடுத்த நாவுக்கரசர் 'இவ்வளவு நெடுங்காலமாக இறைவனை மறந்திருந்த தீவினை யாளனாகிய எளியேனால் இத்தகைய பெருவாழ்வு அடைவதற் குரியதோ?' என வியப்புறுகின்றார். கயிலை மலை அண்ணலின் பேராற்றலை உணராமல் அம் மலையை எடுத்த இராவணனின் பெரும் பிழையைத் திருவுள்ளம் கொள்ளாமல் அவனுக்கு 49. பெரி.புரா. திருநாவுக்கரசு புரா.72, 73 50. இறைவன் திருவருள் துன்பப்படுத்துவதிலும் வந்தடையும் என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டு