பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 71 நீண்டவாணாளையும் வாட்படையையும் வழங்கிய பெருமான் அல்லவா? இப்பெருமானின் பெருங்கருணைத் திறத்தை உணர்ந்து போற்றுவதனையே தமக்குரிய கடமையாகக் கொண்டு அதிகை வீரட்டானத்து இறைவனைத் துதித்துப் போற்றுகின்றார். (2) அரசன் ஆணையை மறுத்துப் பேசியது: சமணத் துறவிகள் வேந்தனின் தலைநகரை அடைந்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக் கோள்மூட்டுகின்றனர். 'மன்னர் பெருமானே, எங்கட்குத் தலைவராக இருந்த தருமசேனர் தமக்குச் சூலை நோய் வந்தது எனப் பொய் கூறிச் சைவராக நம் சமயத்தைத் துறந்தார்' எனச் செப்புகின்றனர். இதனைச் செவிமடுத்த வேந்தன் மிக்க சினங்கொண்டு 'அத்தீயோனை இவன் கொண்டு வாருங்கள்' என்று அமைச்சர்களிடம் பணிக்கின்றான். அரசனது ஆணையினை நிறைவேற்றத்துணிந்த அமைச்சர்கள் சேனை வீரர்களுடன் திருவதிகையை நோக்கி விரைகின்றனர். சிவனடியாரான திருநாவுக்கரசரை அடைந்து, 'பெரியீர், நும்மை அழைத்து வரும்படி எம்மை அரசன் ஏவினான்' என்று உரைக் கின்றனர். இதனைக் கேட்ட நாவுக்கரசர், நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோ மல்லோம்; இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை; தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க் கொய்மலர்சே வடியினையே குறுகி னோமே. (1) என்ற முதற்பாடலையுடைய திருப்பதிகத்தைப் (6.98) பாடு கின்றார். அரசன் ஆணைக்கு இது மறுமாற்றமாக அமைவதால் இது 'மறுமாற்றத் திருத்தாண்டகம் என்னும் திருநாமத்துடன் வழங்குகின்றது.