பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மூவர் தேவாரம் - புதிய பார்வை மேலும் அந்த அமைச்சர்களை நோக்கி, 'தும்மை அனுப் பினவன் தொண்டை நாட்டை ஆளும் பல்லவ வேந்தன். அவனே யன்றி இந்த நாவலந்தீவு முழுவதையும் தன்னடிப் படுத்திய மன்னர் மன்னனே நூம்மை என்பால் விடுத்தானாயினும் யாம் அவர்களைப் பொருளாக மதியோம்' (6) என்றும் கூறுவார். (3) நீற்றறையினில் துன்புறா திருத்தல்: நாவுக்கரசரின் வீரமொழிகளைக் கேட்ட அமைச்சர்கள் அவருடைய திருவடி களை வணங்கி நின்று 'பெருந்தகையீர் யாங்கள் உய்யுமாறு தாங்கள் எம்முடன் எழுந்தருளல் வேண்டும்' என வேண்டிக் கொண்டனர். நாவுக்கரசரும் அவர்தம் வேண்டுகோட் கிணங்கி 'ஈண்டுவரும் வினைகட்கு எம்பிரான் உளன்' என்னும் மன உறுதியுடையவராய் அமைச்சர்களுடன் செல்லுகின்றார். அமைச் சர்கள் தாம் திருநாவுக்கரசரை அழைத்து வந்த செய்தியைப் பல்லவ மன்னனுக்குத் தெரிவிக்க, அவனும் தன் அருகிலுள்ள சமணர்களை நோக்கி ‘இவனுக்குரிய தண்டனை யாது?' என வினவுகின்றான். இச்சமயம் சமணர்கள் இவரை நீற்றறையிலிடு தலே தக்கது' எனப் பரிந்துரைக்கின்றனர். மதிகெட்ட மன்னனும் அவ்வாறே ஆணையிடுகின்றான். அவர்களும் நாவுக்கரசரை வெம்மைமிக்க நீற்றறையிலிட்டுத் தாளிட்டுப் பூட்டுகின்றனர். நீற்றரையில் புக்க நாவுக்கரசர் "ஈண்டு வரும் துயருளவோ? ஈசன் அடியார்க்கு?' என்று சிவபெருமானைத் தம் மனத்திலிருத்தித் தியானித்து வழிபடுகின்றார். ஆனால் வெம்மைமிக்க அந்நீற்றை இளவேனிற் காலத்துத் தென்றல் போலவும், தண்கழுநீர்த் தடம் போலவும், யாழ் ஒலியின் இனிமை போலவும், இறைவன் திருவடி நிழலாகிய அருளின் நீர்மையுடையது போலவும் பேரின்பம் தருவதாய் அமைந்து விடுகின்றது. நாவுக்கரசர் நீற்றையினுள்ளே பிறை சூடிய பிஞ்ஞகனை நினைந்த வண்ணம் அவனுடைய திருவடி நிழலென இன்புற்றிருந்தபொழுது, மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. (1)