பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 థ్రి மென் பந்தாட்டம் படைத்தவராகவும் பந்தைப் பிடித்தாடுபவர் விளங்கு கின்றார். பந்தைப் பிடிப்பவர் விளையாடும் முறை 1. எந்த நேரத்திலும் பந்தைப் பிடித்துவிட நிற்கும் தயார் நிலை. அதாவது உடலாலும் உள்ளத்தாலும் இருக்கின்ற தயார் நிலை. அவ்வாறு பிடித்திடச் செல்கின்ற நிலையை பூனைபோல் பாய்ச்சல் என்றும், எந்த அசைவிலும் இரையைப் பிடிக்க இருக்கும் புலிப் பாய்ச்சல் என்றும், எந்த நிமிடத்திலும் தன்னிடம் வருகின்ற பந்தைப் பிடித்திட நிற்கும் தயார் நிலை என்பதாக ஆட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள். 2. கால்களை சேர்த்துக் கொண்டு நிற்காமல், சற்று அகலமாக வைத்துக்கொண்டு நிற்க வேண்டும். அதாவது, இடப்புறமா, வலப்புறமா, கீழே குனிவதா, அல்லது பின்புறம் வளைவதா என்பன போன்ற அசைவுகளுக்கு விரைந்து செயல்படுகின்ற நிலையிலே நின்று கொண்டிருக்க வேண்டும்.