பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அறிந்து கொள்ள வேண்டியது ஆட்டத்தைப் பற்றிய விதிமுறைகள் ஆகும். எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், விதிகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். அத்துடன் நடுவர்கள் எவ்வாறு சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்ற முக்கிய குறிப்புக்களையும் விவரித்துள்ளேன். பல ஆண்டுகளாக எழுத முயன்று, இடையிடையே தடைபட்டுப்போய், இறுதியிலே நூல் வடிவம் பெற்றிருக்கின்ற இந்நூல், என் பொறுமையையும் முயற்சியையும் அதிகம் சோதித்துவிட்டது என்று கூடக் கூறலாம். என்றாலும், முழுமை பெற்றிருக்கும் இந்நூலைத் தமிழ் கூறும் நல்லுலகத்திடம் படைப்பதில் பெருமையும், பேரானந்தமும் கொள்கிறேன். விதிமுறைகளைப் படிக்கும் பொழுது, ஒரு முறைக்கு இருமுறை அமைதியாகவும் கவனத்துடனும் படித்தால், தெளிவாகப் புரிந்துவிடும் என்ற ஒரு குறிப்பை மட்டும் இங்கே வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். மென் பந்தாட்டத்தின் விதிமுறைகளை எழுதும் பொழுது, உற்ற நேரத்தில் உதவிய சென்னை M.I.T. கல்லூரி உடற்கல்வி இயக்குநர் திரு.எ.இராமச்சந்திரன் B.Sc., M.P.Ed., அவர்களுக்கு என் அன்பு நன்றி. பள்ளிகளில் மாணவர்கள், மாணவியர்கள் மிகவும் விருப்பத்துடன் ஆடுகின்ற மென் பந்தாட்டத்தில் அவ்வப்போது ஐயப்பாடுகள் தோன்றி, ஆடுவோருக்கும் ஆட்டத்தை நடத்துவோருக்கும் இடையே அல்லற் பாட்டினை உண்டாக்கிய சூழ்நிலையைத் தவிர்த்திட இந்நூல் உதவிடும் என்ற நம்பிக்கையில், இந்நூல்