பக்கம்:மேகமண்டலம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்

2

பூமித் தாய்தன் வயிற்றில் இரும்புபொன்

பூணும் வைரம் நிலக்கரி ஆயவை சேமித் தேவைத்துக் காத்திருக்கின்றனள்,

தேடி அந்தப் பொருள்களை மானிடர் காமித் தேஅணி ஆபரணம்பல

கருவி யந்திரம் என்றுரு வாக்கியே நேமித் தார்எவர்? செல்வச் செருக்கரோ?

நித்தம் நித்தம் தொழில்புரி வாரன்ருே?

3.

ஏரி நீர்நிறைந் தேஇருந் தால்என்ன?

எங்கும் காணி பரந்திருந் தால்என்ன? நீரை அந்த நிலத்துக்குப் பாய்ச்சியே

நித்தம் போற்றி உழுது விதைவிதைத் தேரை ஓட்டும் உழவர் தொழில்செய்தல்

இல்லை என்னின் அவைஇருந் தென்பயன்? ஊரைச் சீமையைச் சோறுள்ள தாக்குவ

உழவர் கைகள்,பணம்எண்ணும் கைஅன்றே!

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/114&oldid=620689" இலிருந்து மீள்விக்கப்பட்டது