பக்கம்:மேகமண்டலம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மீண்டலம்

4.

மேகம் ஒன்றனை ஒன்று தழுவலும்

மெல்லச் செல்லெனச் சொல்வதும் மற்றவ்ை ஏகும் போது சிரிப்பதும் பாடலும்

இசையி லேமழை பெய்தலும் வந்தவர்க் காகும் காரியம் யாவையும் பார்ப்பதும்

அரிய காதை புகல்வதும் ஆர்ப்பதும் தாக மேவின் இனியநற் பானங்கள்

தருவ தும்நல் வியப்பு வியப்பரோ!

  • }

முத்தம் இட்டுக் குலாவிய சத்தத்தை

மூடர் மண்ணில் இடியெனச் சொல்வராம்! தத்த மக்குள் நகைக்கும் ஒளியினைத்

தரணி யோர்மின்னல் என்று நினைப்பராம் ! ஒத்த வண்ணம் மலிந்தநன் மேகங்கள்

உவகை யால்விளையாடின் அப்போழ்தங்கே நித்தம் தோன்றும் அழகை உணராமல் -

நீண்ட வானத்தின் வில்லெனக் கொள்வராம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/12&oldid=620475" இலிருந்து மீள்விக்கப்பட்டது