பக்கம்:மேகமண்டலம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

2

வளைத்துக் கழுத்தை நெளிவாக்கி

மகிழ்ச்சி பூத்துக் கால்பெயர்த்துத் திளைத்த கோலப் பேரழகு

தெறிக்க நடஞ்செய் மாமயிலே! விளைத்த நின்சீர்ப் பொலிவெல்லாம் விழையும் பறவை பலஇருந்தும் களைப்பொன் றறியா நினக்கிதுதான் காணி யான காரணம்என் ?

3

நீல மேனி படைத்திருந்தாய்,

நெடிய கழுத்துக் குழைவுடையாய்; ஆல வட்டம் போல்தோகை

அவிழ்த்து நடம்நீ பயில்கின்ருய், கோலும் நின்றன் நடம்போலக்

குவலயத்தே மடமகளிர் ஏலப் பயின்றும் வாராத

ஏற்றம் எங்கே கற்றன.நீ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/43&oldid=620538" இலிருந்து மீள்விக்கப்பட்டது